ஃபைனான்ஸியர் அன்புவிடம் மன்னிப்பு சரண்டரானாரா சசிக்குமார்?: தூக்கில் தொங்கும் அசோக்குமாரின் ஆன்மா!?

First Published Apr 28, 2018, 5:04 PM IST
Highlights
Sasikumar to Forgiveness Financier Anbusezhiyan


இது சினிமா நியூஸ் இல்லை! சீரியஸான சமூகம் சார்ந்த செய்திதான். 
நிச்சயம் உங்களுக்கு நன்றாக நினைவிருக்கும் அந்த தற்கொலை. இயக்குநர் கம் நடிகர் சசிக்குமாரின் உறவினரும், அவரது ‘கம்பெனி ப்ரொடக்‌ஷன்’ நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியுமாக இருந்த அசோக்குமார் தீடீரென தூக்கில் தொங்கி இறந்தார். இந்த சாவுக்கு காரணம், ’கொடிவீரன்’ எனும் படத்துக்காக சசியின் நிறுவனம் சினிமா ஃபைனான்ஸியர் அன்புவிடம் சில கோடிகள் கடன் வாங்கியிருந்ததாகவும், அதற்கு கன்னாபின்னாவென கந்துவட்டி போட்டதோடு, திருப்பிக் கேட்டு பல வகைகளில் அசோக்குமாரை அன்பு டார்ச்சர் செய்ததுமே என்று சொல்லப்பட்டது. 

அசோக்குமார் தற்கொலையை தொடர்ந்து சசியும் இன்னும் சில இயக்குநர்களும் அன்புச்செழியன் மீது புகார் கொடுத்தனர். அவரோ தலைமறைவானார். இந்த சூழலில் அன்புவுக்கு ஆதரவாக சில சினிமா புள்ளிகளும், அவருக்கு எதிராக சில புள்ளிகளும் எதிரெதிரே அமர்ந்து பெரும் விவாத போர் நடத்தினர். சினிமா உலகில் அலசப்பட்ட இந்த கந்துவட்டி கடன் பிரச்னை சாதாரண சிவிலியன் வரை பாதித்தது. எப்படியென்றால், சினிமா ப்ரொடக்‌ஷன் செலவு அதிகமாவதால் கந்தவட்டிக்கு கடன் வாங்குகின்றார் தயாரிப்பாளர். போட்ட பணத்தை லாபத்தோடு திரும்ப எடுக்க பட பெட்டியின் விலையை அவர் ஏற்ற, தியேட்டர் காரர்களோ அதை டிக்கெட் விலையை ஏற்றுவதன் மூலம் ஈடுகட்டுகிறார் என்பதே. 

ஆக அசோக்குமாரின் மரணத்தின் மூலம் மிகப்பெரிய சமூக பிரச்னையின் இன்னொரு முகம் வெளிச்சத்துக்கு வந்தது. 

இந்நிலையில், உறவினர் அசோக்குமார் இறந்ததும் உள்ளும் புறமுமாக ஓவராக குதித்த சசிக்குமார் அதன் பிறகு செம சைலண்டானதுடன், அடுத்த படத்துக்கான வேலையில் இறங்கினார். உறவினர் இறந்தால் அழுவதும், பின் நாளடைவில் தேற்றிக் கொள்வதும் எல்லோருக்குமான இயல்புதான். ஆனால் அசோக்குமாரின் சாவு இயற்கையானதல்ல, அது தூண்டப்பட்ட தற்கொலை என்று சசியே குமுறிப்பேசியிருந்தார். 

அப்பேற்பட்ட நிலையில் குறைந்தபட்சம் அந்த அன்புச்செழியனை அரெஸ்ட் செய்ய வைத்திருந்தாலாவது அசோக் குமாரின் ஆன்மா சாந்தியடைந்திருக்குமே! என்றுதான் சசிக்குமார் இயல்பு நிலைக்கு வந்ததை சக திரையுலக முக்கியஸ்தர்கள் விமர்சித்தனர். 

இந்நிலையில் இந்த விவகாரத்தில் குறிப்பிடத்தக்க பேரதிர்ச்சியான திருப்பம் ஒன்று வந்துள்ளது. அதாவது தூக்கில் தொங்கி இறந்து போன அசோக்குமாரின் ஆவி, மீண்டும் தூக்கில் தொங்கிக்கொள்ளுமளவுக்கு மோசமான ஒரு தகவல் அது. 

அதாவது...சசிக்குமார் நடித்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது அசுரவதம் எனும் படம். இதை ரிலீஸ் செய்வதில் சில சிக்கல். அதாவது விநியோகஸ்தர் கூட்டமைப்பு இந்த படத்துக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளதாம். காரணம், பழைய பாக்கி இன்னும் செட்டிலாகவில்லை! என்பதும் கூடவே அன்பு மீது சசி கொடுத்த புகார் வாபஸ் வாங்கப்படவில்லை என்பதும்தானாம். 

விளைவு, எந்த அன்புவால் தனது உறவினரும், நிழலுமாய் இருந்த அசோக்குமார் தூக்கில் தொங்கி இறந்தாரோ, எந்த அன்புக்கு எதிராக பெரும் போர்க்கொடியை சசி தூக்கினாரோ அதே அன்புச்செழியனை சந்தித்த சசி மனசார மன்னிப்பு கேட்டதாக கோடம்பாக்கம் முழுக்க தகவல் படபடக்கிறது. 

அசோக்குமார் இறந்த பின் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்களிடம் பாய்ந்து பிறாண்டிய சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், அமீர் போன்றவர்கள் இப்போது எங்கே முகத்தை வைத்துக் கொள்வார்கள்?

இதுமட்டுமல்ல சசி இப்படி அன்புவிடம் சரணடைந்த தகவலை கேள்விப்பட்டு சசிக்குமாரை கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள் கோடம்பாக்கத்து இளம் இயக்குநர்கள். 

”நட்புக்காக  உயிரையே கொடுப்பேன்! என்று சினிமாவில் சீன் போடும் சசி, தனக்காக உண்மையில் உயிரைக்கொடுத்த அசோக்குமாருக்காக அட உயிர் வேண்டாம், தலையில் உள்ள ம...! கூட கொடுக்கவில்லையே” என்று வெளிப்படையாகவே போட்டுப் பொளக்கிறார்களாம். 

சசிக்குமார் அன்புச்செழியனிடம் மன்னிப்பு கேட்டதாக பரவி வரும் தகவல் பொய், வதந்தி என்றால் சசி தரப்பு இந்நேரத்துக்கு அதை மறுத்து, கண்டன அறிக்கை கொடுத்திருக்கலாமே!

click me!