' சர்வைவா 'ஒரு மைல் கல்'... துள்ளலுடன் கூறிய யோகி.பி...

 
Published : Jun 21, 2017, 05:18 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
' சர்வைவா 'ஒரு மைல் கல்'... துள்ளலுடன் கூறிய யோகி.பி...

சுருக்கம்

sarvaiva song yogi b speech

ஒரு பாடல் வெளியான ஓரிரு தினங்களிலேயே எல்லா தரப்பினர் மத்தியிலும் ஏகோபித்த ஆதரவு மற்றும் வரவேற்பு பெறுவது மிகவும் அரிது.

அந்த வகையில் 'விவேகம் ' படத்தின் ''சர்வைவ ' பாடல் வெளியான ஓரிரு தினங்களிலேயே இந்த அரிய காரியத்தை செய்துள்ளது .

உலக புகழ் பெற்ற தமிழ் ராப்பர் யோகி பி,   மற்றும் அனிருத் சேர்ந்து பணியாற்றியுள்ள இப்பாடல் வெளியான சில நிமிடத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இதை பற்றி யோகி பி  பேசுகையில் , '' 'சர்வைவ ' எனக்கு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி . அஜித் அவர்களின் நடிப்புக்கும் , அனிருத்தின் இசைக்கும்  ரசிகனான எனக்கு இப்பாடலின் மூலம் இருவருடனும் சேர்ந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த சந்தோஷம் என தெரிவித்துள்ளார். எனது இசை வாழ்க்கையில் 'சர்வைவ ' ஒரு மைல் கல்லாகும் என்றும்,  இப்பாடலை EDM என்ற மேற்கத்திய இசை பாணியில் அமைத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு  புதுமையாக இருக்கும் என உறுதியாக நம்புவதாகவும் . அஜித் அவர்களுடனும் இயக்குனர் சிவா அவர்களுடனும் சத்ய ஜோதி பிலிம்ஸ் உடனும் ஒன்று சேர எனக்கு வாய்ப்பு அளித்த அனிருத் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

மேலும் அனிருத்தின் துள்ளலான இசையும், எனது பாணி வரிகள்  மற்றும் ராப்பிங்கும் அஜித் சாரின் மிரட்டும் கம்பீர தோற்றமும் ஒன்று சேர்ந்துள்ள இப்பாடல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதில் எனக்கு அளவு கடந்த சந்தோஷம் . இப்படம் வெளியாகும் போது திரை அரங்கில் மக்களோடு காண காத்துக்கொண்டிருக்கிறேன் '' என்கிறார் யோகி பி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!