நீங்க சொன்னா! நாங்க கேட்கனுமா? சர்காரில் அன்புமணியை சீண்டும் விஜய்!

By sathish kFirst Published Nov 6, 2018, 11:20 AM IST
Highlights

அன்புமணி ராமதாஸ் சொன்னா நாங்க கேட்கனுமா என்கிற ரீதியில் சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பா.ம.கவினரை நிச்சயம் கோபப்படுத்தும் என்கிறார்கள்.

சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதுமே பா.ம.க கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.  விஜய் புகைப்பிடிப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டரை உடனடியாக நீக்க வேண்டும் என்று அன்புமணி கூறினார். பா.ம.க நிறுவனர் ராமதாசோ ஒரு படி மேலே போய் நான் பழைய ராமதாசாக இருந்திருந்தால் புகைபிடிக்கும் காட்சிகளுடன் சர்கார் படம் திரையரங்குகளில் வெளியாகாது என்று பகிரங்கமாகமிரட்டியிருந்தார்.
   

மேலும் சர்கார் படத்தின் மூலம் புகைபிடிப்பதை நடிகர் விஜய் ஊக்குவிப்பதாக அன்புமணி சார்பில் தமிழக அரசிடம் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சன் பிக்சர்சிடம் விளக்கம் கேட்டது. இதனால் பயந்து போன சன் பிக்சர்ஸ் உடனடியாக தனது அதிகாரப்பூர்வ சமூவலைதள பக்கங்களில் இருந்து விஜய் புகைபிடிக்கும் புகைப்படத்தை நீக்கியது.


 

இதற்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்திருந்தார். மேலும் புகை பிடிக்கும் காட்சிகள் சர்கார் படத்தில் இருக்க கூடாது என்றும் அவர் வேண்டுகோள்விடுத்திருந்தார். ஆனால் சர்கார் படத்தில் விஜய் அறிமுகம் காட்சியே சிகரெட்டை ஸ்டைலாக பற்ற வைத்து பிடித்துக் கொண்டே வருவது போல் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள் பலர் அந்த காட்சியை புகைப்படமாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இப்போது பா.ம.கவால் என்ன செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


   

புகைபிடிக்கும் காட்சிகளுடன் சர்கார் வெளியாக கூடாது என்று ராமதாஸ் மிரட்டியிருந்தார். அன்புமணி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையும் மீறி விஜய் – முருகதாஸ் – சன் பிக்சர்ஸ் இணைந்து அந்த காட்சியை வைத்திருப்பது நீங்க சொன்ன நாங்க கேட்கனுமா என்பது போல் உள்ளதாக பா.ம.கவினர் கூறி வருகின்றனர்.

click me!