அடங்க மாட்டாய்ங்க போலருக்கே... அடுத்த முதல்வர் விஜயேதானாம்... தெறிக்கவிடும் சர்கார் போஸ்டர்!

Published : Nov 05, 2018, 10:46 AM IST
அடங்க மாட்டாய்ங்க போலருக்கே... அடுத்த முதல்வர் விஜயேதானாம்... தெறிக்கவிடும் சர்கார் போஸ்டர்!

சுருக்கம்

போஸ்டரில் இதுவரை தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் முதல் தற்போது ஆண்டுகொண்டிருக்கும் எடப்பாடியாரின் புகைப்படங்கள் வரை இடம்பெற்றிருக்கின்றன. அவர்களுக்கு அருகில் அன்னார் விஜயின் புரட்சி  ஒரு விரல். அடுத்து அவரது படம் இடம்பெற்றிருக்கிறது. அதாவது எடப்பாடியாருக்கு அடுத்த முதல்வர் விஜயேதானாம்.

சர்கார் ஆடியோ வெளியீட்டுவிழாவில் ‘நான் முதல்வரானால்... என்று பேசி அதற்கான பலன்களை அடைந்து விஜய் சற்று அமைதிகாத்தாலும் அவரது ரசிகர்கள் அவரை அவ்வளவு லேசில் விடுவதாயில்லை. 

சில தினங்களுக்கு முன் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டையும் ஒழித்து ‘சர்கார்’ ஆட்சி மலரப்போகிறது என்ற அறிவிப்புடன் மதுரையைக் கலக்கிய போஸ்டர்களைத் தொடர்ந்து, நேற்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் புதிய சர்கார் போஸ்டர் புரட்டிப்போட வந்திருக்கிறது.

அப்போஸ்டரில் இதுவரை தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் முதல் தற்போது ஆண்டுகொண்டிருக்கும் எடப்பாடியாரின் புகைப்படங்கள் வரை இடம்பெற்றிருக்கின்றன. அவர்களுக்கு அருகில் அன்னார் விஜயின் புரட்சி  ஒரு விரல். அடுத்து அவரது படம் இடம்பெற்றிருக்கிறது. அதாவது எடப்பாடியாருக்கு அடுத்த முதல்வர் விஜயேதானாம்.  

‘ஸ்பெஷல் ஷோவுக்கு பெர்மிஷன் வாங்குறதுக்கே எவ்வளவு முக்கு முக்குனாய்ங்க. இதுல அடுத்த முதல்வரா?? அடங்குங்கண்ணா..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!
ஜெட் வேகத்தில் நடந்து முடிந்த ஷூட்டிங்: திரையரங்கு ரேஸில் இடம் பிடிக்கும் D54 படம்!