சர்கார் படத்திற்கு அதிகாலை 5 ஷோ! தமிழக அரசு அனுமதி கிடைப்பதில் சிக்கல்!

By thenmozhi gFirst Published Oct 30, 2018, 2:46 PM IST
Highlights

சர்ச்சைக்கு ஆளாகியுள்ள சர்கார் படத்திற்கு, அதிகாலை ஷோ உள்ளதா, என ரசிகர்களிடையே பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இளைய தளபதி விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார்.

சர்ச்சைக்கு ஆளாகியுள்ள சர்கார் படத்திற்கு, அதிகாலை ஷோ உள்ளதா, என ரசிகர்களிடையே பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இளைய தளபதி விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்த படம், தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள சர்கார் படத்தின் பாடல்கள் சமீபத்தில் ரிலீசாகி, ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளன.

அத்துடன், படத்தின் டீசர், டிரெய்லருக்கும், நல்ல வரவேற்பு நிலவுகிறது. இந்த சூழலில், சர்கார் படத்தின் கதை, தன்னுடைய கதை என்று கூறி, இயக்குனர் பாக்யராஜ், ஏ.ஆர்.முருகதாஸ் மீது புதிய குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இந்த குற்றச்சாட்டு, பல தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சர்ச்சைகளால், படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா, என்ற கேள்விக்குறியும் ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது. அது மட்டுமின்றி, வழக்கமாக, விஜய் நடிக்கும் படங்கள், முதல் நாள் முதல் காட்சிக்கு, ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அதிகாலை 5 மணிக்கு, சிறப்பு ஷோ ஒன்று காட்டப்படுவது வழக்கமாகும். 

இது விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் பின்பற்றப்படும் நடைமுறையாக உள்ளது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் கேள்விக்குறியாக உள்ளதால், அதிகாலை 5 மணி ஷோ நடைபெறுமா என்று, ரோகிணி சில்வர் ஸ்கீரின்ஸ் நிர்வாகி ரேவந்த் சரணிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, அவர், தற்போதைக்கு இதுபற்றி தெளிவான தகவல் இல்லை. இதுபற்றி இறுதி முடிவு செய்ததும், செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்படும், என்று குறிப்பிட்டார். 

இதேபோன்று, மேலும் சில தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகையில், ‘’அரசாங்க விதிமுறைகளின்படி, அதிகாலையில் சிறப்பு ஷோ நடத்துவதற்கு அனுமதி கிடையாது. விஜய்க்கு உள்ள வரவேற்பை கருத்தில்கொண்டு, திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என பல தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சில குறிப்பிட்ட நடிகர்களின் படங்களுக்கு இவ்வாறு நள்ளிரவு 1 மணி அல்லது அதிகாலை 5 மணி ஷோ நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

இதை மேற்கோள் காட்டி விஜயின் சர்கார் படத்திற்கும் அனுமதி தர பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுகிறது,’’ என்றும் குறிப்பிடுகின்றனர். 
இது விஜய் ரசிகர்களிடையே கேள்விக்குறியை அதிகரித்துள்ளது. ஏற்கனவே, தீபாவளிக்கு முதல் நாள் இரவு 1 மணியளவில் ரசிகர்களுக்கு என, சிறப்பு ஷோ நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பின்னர் அது கைவிடப்பட்ட நிலையில், தற்போது அதிகாலை 5 மணி ஷோவாச்சும் நடக்குமா, இல்லியா, என்ற சந்தேகத்தில் விஜய் ரசிகர்கள் காணப்படுகின்றன.

அதேசமயம், திட்டமிட்டபடி தீபாவளிக்கு சர்கார் வெளியாகும் என்றும், வசூலில் புதிய சாதனை படைக்கும் என்றும், விஜய் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் காரசாரமாக பதிவிட்டு வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதே சமயம் சர்கார் படத்திற்கு அதிகாலை ஐந்து மணி ஷோவுக்கு தமிழக அரசு தற்போதைக்கு அனுமதி கொடுக்கவில்லை.

click me!