லிஸ்ட் போட்டு "டெலிட்" செய்த சர்கார் படக்காட்சி..! அந்த முக்கிய 3 விஷயம் இதுதான்...!

By thenmozhi gFirst Published Nov 9, 2018, 3:57 PM IST
Highlights

சர்கார் படத்தில் புதிய காட்சிகள் ஏதும் சேர்க்கப்படவில்லை, சர்ச்சைக்குரிய காட்சிகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது என திரையரங்க உரிமையாளர் சங்கம் தெரிவித்து உள்ளது.

சர்கார் படத்தில் புதிய காட்சிகள் ஏதும் சேர்க்கப்படவில்லை, சர்ச்சைக்குரிய காட்சிகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது என திரையரங்க உரிமையாளர் சங்கம் தெரிவித்து உள்ளது.

சர்கார் படத்தில் இடம்பெறும் காட்சிகள் பல ஆளும் அதிமுக ஆட்சியை பெருமளவு விமர்சனம் செய்வதாக  உள்ளது என கருத்து தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வெளிவந்த வண்ணம் இருந்தது. இதனை கண்ட அதிமுக அரசு சற்று கோபம் அடைந்து சர்காருக்கு தடை வேண்டும் என போர்க்கொடி தூக்கியது. அந்த படத்தில் இடம் பெற்ற பல சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்றும் போரரட்டத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், சர்கார் பட பேனர்கள் கிழிக்கப்பட்டது.

பின்னர், பல திரை அரங்குகளில் ஏற்பட்ட வன்முறை காரணமாக காட்சிகள் ரத்து செய்யப்பட்டு படத்தில் சில காட்சிகள் நீக்கபடும் என திரையரங்க உரிமையாளர் சங்கம் தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்பட்ட எடிட்டிங், மதிய வேளையில் முடிவு பெற்று தற்போது எந்தெந்த  காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளது என லிஸ்ட் போட்டு வெளியிட்டு உள்ளது திரையரங்க உரிமையாளர் சங்கம்
அதன்படி,  

1. இலவச பொருட்களை தீயிட்டு எரிக்கும் 5 நொடி காட்சிகள் நீக்கம்.

2.கோமளவல்லியில், கோமள என்ற சொல் ம்யூட் செய்யப்பட்டு உள்ளது.

3.கொசு உற்பத்திக்குக் காரணமான பொதுப்பணித்துறை என்ற வரியில், பொதுப்பணித்துறை ம்யூட் செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு எடிட்செய்யப்பட்ட காட்சி விவரம் அடங்கிய லிஸ்டை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளது.  

 

click me!