
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து யார் சண்டை போட்டு கொள்வார்கள். என்ன பிரச்சனை வரும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என கூறலாம். கடந்த வாரம் முழுக்க அபிராமி - மதுவின் சண்டை பரவலாக பேசப்பட்ட நிலையில், இந்த வாரம் ஒவ்வொரு நாளும் புது புது பிரச்னையை எழுப்பி வருகிறார்கள் போட்டியாளர்கள்.
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், "எல்லா டாஸ்க்கிலும் கலந்து கொண்டுள்ளேன். உங்கள் எல்லோருக்கும் சீன் அனைத்தும் சொல்லிக்கொண்டு அமர்ந்திருக்கிறேன் ஒருவர் கூட தனக்கு சப்போர்ட் செய்யவில்லை என கூறுகிறார்.
எல்லோரும் அமைதியாக ஆக நான் உள்ளே போகணும் என உட்காந்து கொண்டிருக்கிறீர்கள் என கூறுகிறார். இதற்கு ஏதோ சாண்டி சமாதானம் கூற... அதற்கு அதெல்லாம் தப்பு பா... பேசாதே என கோபமாக பேசுகிறார். இதன் மூலம் தனக்கு ஒரு விஷயம் தெரிந்து விட்டது, அவன் அவன் அவனுடைய வேலையை போய் பாருங்கள்... அசிங்கப்பட்டு போயிடுவீங்க அவ்வளவு தான் என கோபத்தில் கொந்தளித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.