
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஒரு பக்கம், கவின் - லாஸ்லியா காதல் வளர்ந்து கொண்டே இருந்தாலும், மற்றொரு புறம், போட்டியாளர்கள் அனைவரும் தீவிரமாக, நாட்டுப்புற கலைகளை கற்று வருகிறார்கள்.
அந்த வகையில், நேற்றைய முன் தினம் பொம்மலாட்டம், நேற்று கூத்து ஆகியவற்றை கற்று கொண்டது மட்டும் இல்லாமல், கற்று கொண்டதை செய்தும் காட்டினார். இன்றைய தினம், வில்லுப்பாட்டு இவர்களுக்கு சொல்லி கொடுக்கப்படுவது இன்றைய தினம் வெளியாகியுள்ள ப்ரோமோ மூலம் தெரிகிறது.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ காட்சியில், வில்லுப்பாட்டு டாஸ்க்கில் சாண்டி, முகின், லாஸ்லியா, வனிதா ஆகியோர் வில்லுப்பாட்டு ஒன்றை பாடி அசத்துகின்றனர்.
குறிப்பாக கவினை கலாய்க்கும் விதத்தில், கவின் தான் காதல் மன்னன் என சாண்டி கூற, அதனை மீண்டும் மீண்டும் அழுத்தி கூறி கலாய்க்கிறார் முகேன். அப்போது லாஸ்லியா, வெட்கத்தில் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.