
நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் எதிர்பாராத பல சம்பவங்கள் அரங்கேறியது. குறிப்பாக பிக்பாஸ் போட்டியாளர்கள் பலர் கவினுக்கு எதிராக பேச வைத்தது, சாக்ஷியின் அழுகை.
சாக்ஷி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன், மீராவிற்காக ஒரு மீட்டிங் கூட்டினார். ஆனால் மீரா நான் இப்படி சொல்லவே இல்லை என ஜகா வாங்கினார். உண்மையில் இதில்... மீரா மீதும் தவறு என்று கூற எதுவும் இல்லை. அதே நேரத்தில் சாக்ஷி மீது தவறு உள்ளது என சொல்வதற்கு இல்லை.
இவர்கள் இருவரும் காரசாரமாக சண்டை போட்டு கொண்டதை மக்களே மறந்து விட்டாலும், சாக்ஷி, மீரா இருவரும் மீண்டும் மீண்டும் இதையே பற்றி பேசி பிரச்னையை பெரிதாக்குகிறார்கள். குறிப்பாக இந்த பிரச்சனையின் போது, சாக்ஷி மீராவை லூசு என திட்டினார். இதனை மனதில் வைத்து கொண்டு கோவமாகவே இருக்கிறார் மீரா.
இது ஒரு பற்றி பேசிய போது மீரா அழ, இதுகுறித்து கவின் வந்து ஏன் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை என்கிற சண்டை தற்போது எழுந்துள்ளது.
இதுகுறித்து சாண்டியிடம், மது, ரேஷ்மா, மற்றும் ஷெரின் ஆகியோர் அமர்ந்து பேசுகிறார்கள். அப்போது மது,சாக்ஷி அழும் போது அனைவரும் வந்து அவளை சமாதானம் செய்தனர். அவளுக்கு மிகவும் கிளோஸ்சாக இருந்தவர் கவின். ஆனால் அவர் ஒரு வார்த்தை கூட வந்து கேட்காதது தவறு என்றும், மூஞ்சில் முழிக்காதே என சாக்ஷி கூறி இருந்தாலும் இப்படி இருந்திருக்க கூடாது என கூறுகிறார். பின் சாண்டி இது குறித்து நாளை காலை மீட்டிங் போட்டு விடலாம் என கூறினார்.
எப்படியோ மது, சாண்டியை தூண்டி விட்டு கவின் செய்தது தவறு என அவரையே பேச வைத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.