’நான் கிளினிக் திறந்தா என்னை நம்பி ஊசி போட்டுக்குவீங்களா?’...இப்படிக்கு டாக்டர் ‘ரவுடி பேபி’ சாய் பல்லவி...

Published : May 06, 2019, 09:41 AM ISTUpdated : May 06, 2019, 09:42 AM IST
’நான் கிளினிக் திறந்தா  என்னை நம்பி ஊசி போட்டுக்குவீங்களா?’...இப்படிக்கு டாக்டர் ‘ரவுடி பேபி’ சாய் பல்லவி...

சுருக்கம்

’இதை இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது என்கிற கதையாக தான் ஒரு டாக்டர் என்பதை தானே மெல்ல மெல்ல மறந்து கொண்டு வருவதாக ‘ரவுடி பேபி’ நடிகை சாய் பல்லவி கூறுகிறார்.

’இதை இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது என்கிற கதையாக தான் ஒரு டாக்டர் என்பதை தானே மெல்ல மெல்ல மறந்து கொண்டு வருவதாக ‘ரவுடி பேபி’ நடிகை சாய் பல்லவி கூறுகிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கும் ‘என்.ஜி.கே’ படம் மே 31ல் திரைக்கு வருகிறது. அவர் அதிகப் படங்களில் கமிட் ஆகாமல் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் செலக்டிவாக நிதானமாக நடித்து வருகிறார். இதனால் அவர் படித்த டாக்டர் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்து யாராவது கேள்வி எழுப்பினால் தன்னையறியாமல் உற்சாகமாகிவிடும் சாய்பல்லவி,’ பரவாயில்லை நான் ஒரு டாக்டர்ங்கிறதை நானே மெல்ல மெல்ல மறந்துட்டு வர்றப்ப மக்கள் யாராவது ஞாபகப்படுத்திடுறாங்க. ஒருவேளை எதிர்காலத்துல கிளினிக் வச்சி மக்களுக்கு வைத்தியம் பாக்குற ஐடியா இருக்கான்னு ஒரு சிலர் கேக்குறாங்க.

நான் இனிமே கிளினிக் திறந்தா மக்கள் என்னை நம்பி கண்டிப்பா ஊசி போட்டுக்க மாட்டாங்க. ஆனா ஹாஸ்பிடல்ல கண்டிப்பா கூட்டம் குவியும். எதுக்குன்னா என்கூட செல்ஃபி எடுத்துக்கிறதுக்காக. ஆனா என் வீட்டைப் பொறுத்தவரைக்கும் அவங்க எல்லாருக்கும் நான் தான் டாக்டர். வேற வழியில்லாம நம்பி ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிறாங்க’ என்று சிரிக்கிறார் டாக்டர் சாய் பல்லவி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் எவிக்‌ஷன்... பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் காலியாகப்போகும் 2 விக்கெட் யார்?
தமிழகம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே பாஜக விருப்பம்..! இயக்குநர் பா.ரஞ்சித் குற்றச்சாட்டு!