
Sai Abhyankkar Music For Ajith Movie : கோலிவுட்டில் தற்போது சென்சேஷனல் இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளவர் சாய் அபயங்கர். இவர் இசையமைத்த சுயாதீன இசை ஆல்பம் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதை தொடர்ந்து சாய் அபயங்கருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அவரை முதன்முதலில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியது லோகேஷ் கனகராஜ் தான். அவர் தயாரிக்கும் பென்ஸ் படத்திற்கு தான் சாய் முதன்முதலில் இசையமைக்க கமிட்டானார்.
இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 45 படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகியதை அடுத்து அவருக்கு பதில் சாய் அபயங்கரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தனர். இதுதவிர பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் டியூடு திரைப்படத்திற்கும் சாய் அபயங்கர் தான் இசையமைக்க உள்ளார். இப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்கிறது.
மேலும் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் இயக்கும் எஸ்.டி.ஆர் 49 திரைப்படத்திற்கும் சாய் தான் இசையமைப்பாளராக கமிட்டாகி உள்ளார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இதோடு, அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட படத்திற்கு சாய் இசையமைக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். இப்படம் ரூ.700 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது.
இப்படம் கைவசம் அரை டஜன் படங்களுடன் பிசியாக இருக்கும் சாய் அபயங்கருக்கு மற்றுமொரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். அதன்படி நடிகர் அஜித் நடிப்பில் உருவாக உள்ள ஏகே 64 திரைப்படத்திற்கு சாய் தான் இசையமைக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க உள்ளாராம். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.