முதலில் தோனி.... இப்போது சச்சின்.... யாருக்கு அதிக வசூல்.....!!!

Asianet News Tamil  
Published : Dec 31, 2016, 04:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
முதலில் தோனி.... இப்போது சச்சின்.... யாருக்கு அதிக வசூல்.....!!!

சுருக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் மிக பெரிய பலம் என்று சொல்லப்படும் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தோனி' சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

அதிலும் முக்கியமாக கிரிக்கெட் பிரபலம்  ஆகாத நாடுகளில் கூட தோனி  படம் பெரும் வரவேற்பை பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் கடந்த சில மாதங்களாக தயாராகி வருகிறது.

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி 'சச்சின்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஜேம்ஸ் எர்ச்கின் இயக்கியுள்ளார். சச்சின் தெண்டுல்கரே அவரது கேரக்டரில் நடித்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.

முதலில்ச தோனி படத்தின்ச்சி மூலம்ன் களமிறங்கிய தோனி அதிக வசூல் சாதனை படைப்பாரா அல்லது இப்போது களமிறங்க உள்ள சச்சின் அதிய வசூல் சாதனை படைப்பாரா   ஏன பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திருமணம் செய்ய வயது மட்டும் போதாது.. நம்பிக்கை மற்றும் புரிதல் அவசியம்! நடிகை பிரகதி ஓப்பன் பேச்சு!
ஆன்லைனில் ஏமாந்த ஜி.வி. பிரகாஷ்? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அந்த மர்ம நபர்! நடந்தது என்ன?