சாமி 2! முதல் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Published : Sep 25, 2018, 11:10 AM ISTUpdated : Sep 25, 2018, 11:15 AM IST
சாமி 2! முதல் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்திருப்பவர் இயக்குனர் ஹரி. இவரது படங்களில் காதல் ஆக்ஷன் சென்டிமெண்ட் காமெடி என ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்திருப்பவர் இயக்குனர் ஹரி. இவரது படங்களில் காதல் ஆக்ஷன் சென்டிமெண்ட் காமெடி என ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் இரண்டாயிரத்து மூன்றாம் ஆம் ஆண்டு நடிகர் விக்ரமை வைத்து சாமி என்ற ஜனரஞ்சக திரைப்படத்தை ஹரி இயக்கினார். நடிகர் விக்ரம் நடிகை திரிஷா , கோட்டா சீனிவாசராவ் விவேக் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. நல்ல வசூலையும் ஈட்டிக் கொடுத்தது. 

 இதைடுத்து நடிகர் சூர்யாவை வைத்து சிங்கம் திரைப்படத்தை எடுத்திருந்தார் ஹரி. சூரியா போலீசாக நடித்த  இந்த திரைப்படம் ஹிட்டாகவே தொடர்ந்து சிங்கம் திரைப்படத்தின் 3 பாகங்களை ஹரி இயக்கினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் விக்ரமுடன் இணைந்த ஹரி, சாமி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்.  நடிகர்கள் விக்ரம். பாபி சிம்ஹா. சூரி நடிகை கீர்த்தி சுரேஷ். ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். 

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமையன்று ரிலீஸ் ஆனது. சென்னையில் மட்டும் 285 திரையரங்குகளில் சாமி ஸ்கொயர் திரையிடப்பட்டது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான சாமி ஸ்கொயர் வரவேற்பை பெறத் தவறி விட்டதாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன. கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்துள்ளன. ஆனால் இந்த விமர்சனங்கள் படத்தின் வசூலை பாதிக்கவில்லை என்றே கூறலாம். 

படம் வெளியான 3 நாட்களில் சென்னையில் மட்டும் சாமி ஸ்கொயர் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் வசூல் ஈட்டி உள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் மட்டுமே. ஒட்டு மொத்த வசூல் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. சென்னையில் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் வசூல் ஈட்டி இருந்தாலும் இத்திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனை புரியுமா என்பது அடுத்த திங்கள் கிழமை தான் தெரியவரும்.

PREV
click me!

Recommended Stories

விஜயகாந்த் மகன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? கொம்புசீவி விமர்சனம் இதோ
பாலய்யாவின் மாஸ் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டாக இருந்ததா? அகண்டா 2 விமர்சனம் இதோ