தடைகள் தாண்டி வெற்றி கண்ட 'சீமராஜா'! ரசிகர்களின் கலக்கல் கமெண்ட்ஸ்!
24 A.M. ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா மிக பிரம்மாண்டமான செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘சீமராஜா’.
படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி, லால் மற்றும் பல பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இயக்குநர் பொன்ராம் படத்தினை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது. பல்வேறு எதிர்ப்பார்புகளுக்கு இடையே இன்று சீமராஜா வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் பல திரையரங்கங்களில் காலை 5 மணி ஷோக்களுக்கு கூட டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது.
undefined
ஆனால் சொன்ன நேரத்தில் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்ப்பட்டது. இதற்கு காரணம், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வேலைக்காரன் படத்தில் ஏற்பட்ட பணம் பிரச்சனை என கூறப்பட்டது. ஒருவழியாக இந்த பிரச்சனை முடிவடைய காலை 8 மணி ஷோ திரையிடப்பட்டது.
ஆனால் 5 மணிக்கே முன்பதிவு செய்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இப்படி பல தடைகள் தாண்டி வெளியாகியுள்ள 'சீமராஜா' திரைப்படம், ரசிகர்களிடம் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலர் படம் மிகவும் அருமையாக உள்ளதாகவும்... சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் இது மிகவும் மிக்கியமான படம் என்றும் கூறி படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதன் மூலம் மூன்றாவது முறையாக பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணி தடைகள் தாண்டி வெற்றி வாகை சூடியுள்ளது உறுதியாகியுள்ளது.