
இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்துவருகின்றன. 3ம் அலைக்கான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 31ம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகத்தில் மின்னல் வேகத்தில் இருந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த 6ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சினிமா பிரபலங்கள் பலருக்கும் கொரோனா உறுதியாகிவருகிறது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன், பாடகர் சோனு நிகாம் மற்றும் நடிகை த்ரிஷா நடிகர் சத்யராஜ், இயக்குனர் பிரியதர்ஷன், அருண்விஜய், குஷ்பூ, சுரேஷ் கோபி, ஜெயராம், துல்கர்சல்மான் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவர்களில் பலரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். அதோடு பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ஆபத்தான நிலையில் icu -வில் சிகிச்சை பெற்று வருகிறார்..
இவரை தொடர்ந்து பிரபல இயக்குனரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளதாக ட்வீட்டரில் அறிவித்துள்ளார்... இந்நிலையில் சினிமா பிரபலமும், அரசியல் பிரமுகருமான எஸ் வி சேகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்..
இது குறித்து பகிர்ந்துள்ள எஸ்.வி.சேகர்... தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர், இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்ட பிறகும் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டு விட்டதால் டாக்டர்களின் அறிவுரையின் பேரில் தான் வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.