மலையாள நடிகையின் யார்க்கரில் க்ளீன் போல்டு ஆன இந்திய நட்சத்திர பவுலர் பும்ரா...

By Muthurama LingamFirst Published Jun 8, 2019, 6:24 PM IST
Highlights

நடிகைகளின் கண் வீச்சில் ஏற்கனவே பல கிரிக்கெட் வீரர்கள் க்ளீன் போல்ட் ஆகியுள்ள நிலையில் தற்போதைய இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா மலையாள நடிகையின் யார்க்கரில் சிக்கிச் சின்னப்பின்னமாகிவிட்டதாக சில லாஜிக் பாயிண்டுகளுடன் கிசுகிசுத்து வருகின்றனர்.

நடிகைகளின் கண் வீச்சில் ஏற்கனவே பல கிரிக்கெட் வீரர்கள் க்ளீன் போல்ட் ஆகியுள்ள நிலையில் தற்போதைய இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா மலையாள நடிகையின் யார்க்கரில் சிக்கிச் சின்னப்பின்னமாகிவிட்டதாக சில லாஜிக் பாயிண்டுகளுடன் கிசுகிசுத்து வருகின்றனர்.

யாக்கர் மன்னன் என்றழைக்கப்படும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இந்திய அணிக்கு தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் இருந்த குறையை பும்ரா போக்கியுள்ளார் என்றே சொல்லாம். ஐசிசி பவுலர்கள் தரவரிசைப் பட்டியலில் பும்ரா தான் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கும் மலையாள நடிகை அனுபாமாவிற்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுப்படுகிறது.

நடிகை அனுபாமா நிவின் பாலி நடித்த ’பிரமேம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். சுருட்டை முடி, கவர்ச்சியான சிரிப்பின் மூலமாக ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தார். தமிழில் தனுஷூடன் சேர்ந்து ’கொடி’ படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் எந்த படத்திலும் நடிக்கவிட்டாலும் தெலுங்கிலும், மலையாளத்திலும் அனுபமா பிஸியாக உள்ளார். இன்னொரு பக்கம் துல்கர் சல்மானின் முதல் சொந்தத் தயாரிப்பான பெயரிடப்படாத படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டே உதவி இயக்குநர் வேலையும் பார்க்கும் செய்தியையும் சமீபத்தில்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு உற்சாகமான தொனியில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் பும்ரா - அனுபமா இருவருக்கும் இடையே காதல் என கிசுகிசுக்க காரணமாக அமைந்துள்ளது அவர்களின் ட்விட்டர் பக்கம் . ட்விட்டரில் பும்ரா ஃபாலோ செய்யும் 25 பேர்களில் அதிகம் பேர் கிரிக்கெட் வீரர்கள். மற்றவை கிரிக்கெட் தொடர்புடைய பக்கம். அவர் ஃபாலோ செய்யும் ஒரே நடிகை அனுபமா மட்டுமேதான். அனுபமாவும் தனது ட்விட்டரில் பும்ராவை ஃபாலோ செய்கிறார். மேலும் அவர் போடும் ஒவ்வொரு பதிவிற்கும் லைக் செய்து, அதை ஷேர் செய்து வருகிறார்.இருவரும் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் பரப்ப இது ஒன்று போதாதா?

click me!