ரோல்ஸ் ராய்ஸ் கார் இறக்குமதி..! நடிகர் விஜய் மீது மேலும் ஒரு புகார்..! புது வில்லங்கம்..! ஆனால்?

By Selva KathirFirst Published Jul 16, 2021, 8:54 AM IST
Highlights

விஜய் தரப்பு தாக்கல் செய்த மனுவிலேயே, என்ட்ரி டேக்ஸ் செலுத்தாமல் காரை பதிவு செய்து சான்றிதழ் தர இயலாது என்று ஆர்டிஓ அலுவலகத்தில் கூறிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதன் மூலம் 2012ல் இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரை விஜய் தற்போது வரை பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு என்ட்ரி டேக்ஸ் செலுத்த மறுத்து விலக்கு கேட்ட விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நிலையில் அந்த காரால் விஜய்க்கு மேலும் ஒரு வில்லங்கம் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், என்ட்ரி டேக்ஸ் கட்டாத காரணத்தினால் விஜயின் காரை ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யாமல் இருப்பது சுட்டிக்காட்டியிருந்தது. மேலும் விஜய் தரப்பு தாக்கல் செய்த மனுவிலேயே, என்ட்ரி டேக்ஸ் செலுத்தாமல் காரை பதிவு செய்து சான்றிதழ் தர இயலாது என்று ஆர்டிஓ அலுவலகத்தில் கூறிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதன் மூலம் 2012ல் இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரை விஜய் தற்போது வரை பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த காருக்கு ஆர்டிஓ தரப்பில் இருந்து பதிவு எண்ணும் வழங்கப்படவில்லை என்று கூறுகிறார்கள்.

பதிவு எண் இல்லாமல் ஒரு காரை சுமார் 9 வருடங்களாக விஜய் வீட்டிலேயே நிறுத்தி வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம் விஜய் ஒரு சில சமயங்களில் இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் மூலம் சில நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளதை ஒரு தரப்பு சுட்டிக்காட்டுகிறது. அதோடு இல்லாமல் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற தனது பட விழாவில் பங்கேற்க விஜய் இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் தான் வந்ததாகவும் கூறுகிறார்கள். அதாவது விஜய் பதிவு செய்யப்படாத காரை பயன்படுத்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதாவது மோட்டார் வாகன சட்டத்தின் படி காரை பதிவு செய்யாமல் பயன்படுத்துவது குற்றமாகும். முதல் முறை இப்படி பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.

தொடர்ந்து பதிவு செய்யாத காரை பயன்படுத்தினால் அந்த காரை பறிமுதல் செய்யும் அளவிற்கு சட்டத்தில் இடம் உள்ளதாக கூறுகிறார்கள். மேலும் காரை பதிவு செய்யாமல் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு குறிப்பிட்ட தொலைவிற்கு மட்டுமே கொண்டு செல்ல முடியும். அதனை தாண்டியிருந்தாலும் கார் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அதாவது பதிவு செய்யாத காரை குறிப்பிட்ட சில கிலோ மீட்டர்கள் வரை மட்டுமே ஓட்ட வேண்டும், அதனை தாண்டியிருந்தால் காருக்கும் சிக்கல், உரிமையாளருக்கும் சிக்கல். இதனிடையே விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிய போது சென்னை சாலி கிராமத்தில் இருந்ததாக கூறுகிறார்கள்.

ஆனால் விஜய் தற்போது நீலாங்கரையில் உள்ளார். பதிவு செய்யப்படாத நிலையில் காரை வாங்கிய போது இருந்த முகவரியில் தான் அந்த கார் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த கார் எப்படி நீலாங்கரை வரை சென்றது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே விஜய் தரப்புக்கு எதிரான சிலர் இந்த விஷயங்களை எல்லாம் சேகரித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஆர்டிஓ அலுவலகத்தை அணுக முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்கள். அப்படி அணுகும் பட்சத்தில் கிடைக்கும் தகவல்களை அடிப்படையாக கொண்டு விஜய்க்கு எதிராக புகார் அளிக்க முடியும். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார் இதுவரை எத்தனை கிலோ மீட்டர் ஓடியுள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

பதிவு செய்யப்படாத கார் அனுமதிக்கப்பட்ட கிலோ மீட்டரை தாண்டி இயங்கியிருந்தால் கண்டிப்பாக சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். இதனை அறிந்த விஜய் தரப்பு வாரிசு அரசியல் பிரமுகர் ஒருவரை தொடர்பு கொண்டதாக சொல்கிறார்கள். அவரும் விஜய் தரப்புக்கு உதவுவதாக கூறியுள்ளதுடன் அதிகாரிகளை தொடர்பு கொண்டு எந்த காரணம் கொண்டும் தற்போதைக்கு கார் விவகாரத்தில் விஜயை டச் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் இந்த கார் இறக்குமதி செய்யப்பட்ட கார் என்பதால் விஜய் அவ்வப்போது எதிர்த்து பேசி வரும் மத்திய அரசு தரப்பும் என்ன விவகாரம்என்று மோப்பம் பிடிக்க ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள்.

click me!