
கடந்த சில மாதங்களாக அரசியல் சூழல் மட்டும் இன்றி, தமிழ்நாட்டின் மீதும் நடிகர்கள் பலர், அதிகம் அக்கறை காட்டி வருகின்றனர். உதாரணமாக லாரன்ஸ், ஜி.வி.பிரகாஷ், ஆரி, கமலஹாசன், என சொல்லிக்கொண்டே போகலாம்.
ஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல் போராட்டம் என்பதையும் தாண்டி சென்னையில் வெள்ளம் வந்தபோது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி முதலில் மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து உதவியவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி.
இவர் தற்போது நீட் தேர்வு விவகாரத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி நேற்று தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவிற்கு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து, தலைவர்களுக்கு எதிராக மிகவும் கோபமாக ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் சாதாரண மாணவர்கள் அவர்களது கனவை தியாகம் செய்ததை தாண்டி இப்போது வாழ்க்கையை தியாகம் செய்யத்துவங்கி விட்டனர்.
இப்படி நடப்பதற்கு காரணம் தகுதியற்ற, ஊழல் நிறைந்த, வெட்கமில்லாத தலைவர்களின் பொறுப்பற்ற நடவடிக்கையால் தான் என்று மிகவும் கோபமாக கூறியுள்ளார். இவரின் ட்விட்டிற்கு பல ரசிகர்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.