வாவ்..வலிமை தயாரிப்பாளருடன் கூட்டணி அமைத்த ஆர்.ஜே.பாலாஜி..மஞ்சள் பத்திரிக்கையில் வெளியான சேதி..

Kanmani P   | Asianet News
Published : Mar 04, 2022, 05:45 PM IST
வாவ்..வலிமை தயாரிப்பாளருடன் கூட்டணி அமைத்த ஆர்.ஜே.பாலாஜி..மஞ்சள் பத்திரிக்கையில் வெளியான சேதி..

சுருக்கம்

ஆர் ஜே பாலாஜி இப்போது போனி கபூரின் பே வாட்ச் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது..

வானொலியில் தொகுப்பாளராக வேலை செய்துவந்த ஆர் ஜே பாலாஜி, தனது நகைச்சுவையான மற்றும் தனித்துவமான பேச்சால் ரசிகர்களைக் கவர்ந்தவர். சினிமா விமர்சனங்களை செய்துவந்த அதன் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தால் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

 ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் எல் கே ஜி என்ற அரசியல் பகடி படத்தில் கதை, திரைக்கதையில் பங்களிப்பு செய்து நடித்தார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபு என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியால் மீண்டும் ஐசரி கணேஷோடு இணைந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை சரவணன் என்பவரோடு இணைந்து இயக்கினார். நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்த இப்படம் கடந்த 2020-ம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதன் பின் அவர் இயக்கியுள்ள ‘வீட்ல விசேஷங்க’ என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் சிவானி ஹீரோயினாக நடித்துள்ளது தெரியவந்துள்ளது. இதனை அவரே தனது சமூக வலைதள பதிவு மூலம் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதையடுத்து ஆர் ஜே பாலாஜி இப்போது போனி கபூரின் பே வாட்ச் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படத்தில் இணைந்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளதாக தெரிகிறது. இதுவரை படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில் இப்போது ஆர் ஜே பாலாஜி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மார்ச் 18 ஆம் தேதி வெளியாகும் என தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் மங்களகரமான போஸ்டர் ஒன்றையும் வெளியிடவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!
இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்