ராதிகா மகள் ரேயான் இப்படிப் பட்டவரா...? 

 
Published : Nov 21, 2017, 02:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
ராதிகா மகள் ரேயான் இப்படிப் பட்டவரா...? 

சுருக்கம்

rathika dauther rayone news

வாரிசு நடிகையான ராதிகா, தன்னுடைய தந்தை, அண்ணன்களைத் தொடர்ந்து சினிமாவில் கால் பதித்தவர், 80 களில் கதாநாயகியாகக் கலக்கிய இவர் திருமணத்திற்குப் பின் குணச்சித்திர வேடங்களில் நடித்து தன் நடிப்புத் திறமையை நிரூபித்து வருகிறார்.

இவருடைய முதல் திருமணம், மணமான சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தது, இதைத் தொடர்ந்து இரண்டாவதாக பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹென்றி என்பவரை திருமணம் செய்து கொண்டு, சில ஆண்டுகள் வாழ்ந்தார். அவருக்குப் பிறந்த மகள்தான் ரேயான் ஹென்றி. 

ராதிகா இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக  விவாகரத்து பெற்று தனிமையில் தன் மகளுடன் வாழ்ந்து வந்தார். பின் ஒரு சில ஆண்டுகள் கழித்து நடிகர் சரத்குமாரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார்... இது பலரும் அறிந்தது தான். 

ராதிகாவைப் பற்றி தெரிந்த பலருக்கும் அவருடைய மகள் ரேயான் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரேயான் பிறந்து வளர்ந்தது  எல்லாம் சென்னை என்றாலும், பட்டப் படிப்பைப் பயின்றது வெளிநாட்டில். ரேயான் இது வரை ஒரு முறைகூட திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ராதிகாவிடம் கூறியதே இல்லையாம். பள்ளி விடுமுறையில் எப்போதாவது ராதிகாவுடன் அவருடைய ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் செல்வாராம்.

மேலும் 15 வயதிலேயே ராதிகா நடத்தி வந்த 'ராடான்' நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைப் பார்க்க துவங்கிய இவர், தற்போது அந்த முழு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார்.  இதுவரை அவருடைய நிறுவனத்தில் பணிபுரியும் யாரிடமும் கோபமாகவோ, கண்டிப்புடனோ அவர் நடந்துகொண்டதே இல்லையாம்.

அதே போல் பல்வேறு வசதிகள் இருந்தும் எப்போதும் மிகவும் சாதாரணமாக இருக்கும் ஒரு பெண்ணாகத் தான் அனைவரிடத்திலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வாராம். இவர் முதல் முதலில் தயக்கத்துடன் ராதிகாவிடம் வெளிப்படுத்திய விஷயம் இவருடைய காதல் பற்றித்தானாம். முதலில் இந்தக் காதல் பற்றி நிறைய யோசித்த ராதிகா பின் தன் மகளின் சந்தோஷத்திற்காகவும், அவர் முடிவு என்றுமே நல்லதாகத் தான் இருக்கும் என்பதாலும் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

ராதிகா அவருடைய வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்திருந்தாலும் அவர் மகள், திருமணம் வரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து காதலித்தவரையே முறைப்படி திருமணம் செய்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்