
நடிகர் கெளதம் கார்த்தி நடித்த, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தில் திகிலூட்டும் ஹாட் பேயாக நடித்து, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை யாஷிகா. இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் நோட்டா திரைப்படம் வெளியானது.
மேலும் பிக்பாஸ் சீசன் 2 - ல் கலந்து கொண்டு விளையாடி, மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்றாலும், திடீர் என யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் வெளியேற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து தற்போது திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில்... தன்னுடைய அப்பா வயது மதிக்க தக்க இயக்குனர் ஒருவர், தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதைதொடர்ந்து தன்னிடம் போலீஸ்கார் ஒருவர் ரேட் பேசியதாக... கூறி பகீர் கிளப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்... ஒரு நாள் தன்னுடைய நண்பர்களுடன் ரோட்டில் நின்றுகொண்டிருந்த போது அந்த வழியாக வந்த போலீஸ்காரர் ஒருவர் உன் ரேட் எவ்வளவு என்று கேட்டார். பின் இதைப் பார்த்த தன்னுடைய நண்பர்கள் அந்த போலீஸ்காரரை அடித்ததால் விபரீதம் ஏற்பட்டது.
பின் இந்த சம்பவம் குறித்து யாஷிகா காவல் நிலையம் சென்று புகார் அளித்த போது... அவர்கள் சற்றும் கண்டு கொள்ளாமல், தவறான கண்ணோட்டத்தோடு பார்த்தார்களாம். இதனால் பல நல்ல காவலர்கள் இருக்கும் நிலையில் இது போன்ற சில காவலர்களும் இருக்கிறார்கள் என மன வேதனையோடு கூறியுள்ளார் யாஷிகா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.