
தமிழில் தேசிய விருது பெற்ற திரைப்படமான, இயற்கை'' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை குட்டி ராதிகா. தமிழ் மட்டும் இன்றி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிகும் நடித்துள்ளார். 'தற்போது 'பைரவி தேவி', 'ராஜேந்திர பொன்னப்பா', 'நிமஆகாகி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு, கன்னட திரையுலகில் 'நீல மேகஷாமா' என்ற படத்தில் தன்னுடைய 16 வயதில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூடமும் உள்ளது.
இந்நிலையில் இவரை பற்றிய செய்தி தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. காரணம் இன்று, கர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள குமாரசாமியின் இரண்டாவது மனைவி இவர் என்பதால் தான். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
கர்நாடகாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த இவரை, குமாரசாமி கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு, ரகசிய திருமணம் செய்துக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து யார் கண்களிலும் படாமலிருந்த குட்டி ராதிகா. குழந்தையோடு பெங்களூர் விமான நிலையத்திற்கு வர, குழந்தையின் தந்தை குமாரசாமி என்று அறிவித்தார். இதனை குமாரசாமியும் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், நடிகர் சிம்புவுடன் 'குத்து' , உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகையும், அரசியல் வாதியுமான குத்து ரம்யா கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள தகவலில், குமாரசாமியின் முதல் திருமணம் ஆன 1986 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் இவருடைய இரண்டாவது மனைவி குட்டி ராதிகா என்று பலருக்கு தெரியாத ரகசியத்தை கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.