
பிக்பாஸ் வீட்டில், நேற்றில் இருந்து நடைபெற்று வரும் பிக்பாஸ் கால் சென்டர் டாஸ்கால் பல்வேறு பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் நேற்று பாலாஜி - அர்ச்சனா , சனம் - சம்யுக்தா ஆகியோர் முட்டிக்கொண்டதை பார்தோம்.
இதை தொடர்ந்து இன்று வெளியான புரோமோக்களிலும், தற்போதைய டாஸ்கால் வரும் பிரச்சனைகள் தான் காணப்பட்டன. ஆனால் மூன்றாவது புரோமோவில் சற்று வித்தியாசமாக, ரம்யா நிஷா - ஜித்தன் ரமேஷ் இடையே பிரச்னையை பற்ற வைத்துள்ளார்.
கால் சென்டர் டாஸ்கில், ரமேஷுக்கு கால் செய்யும் ரம்யா ’என்னை நாமினேட் செய்ய ஒரு காரணம் சொல்லுங்கள்’ என்று கூற அதற்கு ரமேஷ் ’நீங்கள் ஒரு சைலன்ட் கில்லர் சிரிச்சே நீங்கள் ஊசி போட்டுவிடுவீர்கள் மேடம்’ என்று கூறுகிறார். இதில் ரம்யா முகம் மாறுவதும் காட்டப்படுகிறது.
அதன்பிறகு நிஷாவை நாமினேட் செய்ய ஒரு காரணம் கூறுங்கள் என்று ரம்யா கேட்க, அதற்கு சிறிது நேரம் யோசித்த ரமேஷ் ’ஒருத்தரை நம்பியே அவங்க இருக்காங்க’ என்று கூறுகிறார். அந்த ஒருத்தர் யார் என்று நீங்கள் கூறுங்கள் என்று ரம்யா மீண்டும் கேட்பதுடன் மூன்றாவது புரமோ முடிவடைகிறது.
ரமேஷ் இந்த பதிலை கூறும் போது நிஷாவின் முகமே மாறுகிறது. மேலும் அர்ச்சனா, ரியோ ஆகியோர் சொதப்பி விடாதே... என அகம் டிவியை பார்த்து புலம்பி வருகிறார்கள். ரமேஷ் ரியோ பெயரை சொல்வாரா அல்லது அர்ச்சனா பெயரை சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.