
சர்ச்சை இயக்குனர் என்கிற பெயருக்கு மிகவும் பொருத்தமானவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா.இவர் எப்போதுமே ஏடாகூடமாக எதையாவது போட்டு பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார்.
அவர் கூறிய கருத்திற்கு பலர் அவரை கழுவி ஊற்றினாலும் எப்போதும் எதற்கும் அசராமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதையே செய்வார்.
சமீபத்தில் கூட பெண்கள் தினத்தன்று, அனைத்து பெண்களும் சன்னி லியோன் போல் ஆண்களை சந்தோஷ படுத்த வேண்டும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதற்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் போன்ற பலர் எதிர்ப்பு தெரிவிக்கவே மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தார்.
இந்நிலையில் அவரை பிடிக்காத சிலர் அவர் இறந்து விட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலியுடன் கூடிய ஒரு மீம்ஸை கிரியேட் செய்து அதை வெளியிட்டுள்ளனர்.
இதனை பார்த்த ராம் கோபால் வர்மா எந்தவித கவலையும் இல்லாமல், மறுப்பும் தெரிவிக்காமல் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.