மாதந்தோறும் ரூ.2.5 லட்சம் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் - நடிகை ரம்பா மேலும் ஒரு மனுதாக்கல்

 
Published : Oct 27, 2016, 07:35 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
மாதந்தோறும் ரூ.2.5 லட்சம் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் - நடிகை ரம்பா மேலும் ஒரு மனுதாக்கல்

சுருக்கம்

தனது கணவருடன் சேர்த்துவைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற குடும்ப நலக்கோட்டில் வழக்கு தொடர்ந்திருந்த நடிகை ரம்பா தனது கணவர் மாதந்தோறும் ரூ.2.5 லட்சம்  வழங்க வேண்டும் என கூடுதலாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். 

நடிகை ரம்பா பிரிந்து வாழும் தனது கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தார். இந்த வழக்கு வருகிற டிசம்பர் 3ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் இந்த வழக்குடன் ரம்பா கூடுதலாக ஒரு மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.  அதில் தனது கணவரிடம் இருந்து எனக்கு மாதந்தோறும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், இரு குழந்தைகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பாரமரிப்பு உதவி தொகை வழங்க வேண்டும் என மனுவில் கூறி இருக்கிறார்.

இந்த மனுவில் டிசம்பர் 3 ம் தேதி சென்னை மாவட்ட 2வது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.    

இந்நிலையில் இந்த வழக்கு பற்றி தனக்கு ஒன்றுமே தெரியாது , தான் வழக்கே போடவில்லை என ரம்பா மறுத்துள்ளதாக செய்தி வெளியானது. ஆனால் அவர் இரண்டாவது மனுவையும் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.                    

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!