இந்தமுறை நடக்கும் ரசிகர்கள் சந்திப்பில் அரசியல் பிரவேசம் குறித்து நிச்சயம் அறிவிப்பாராம் ரஜினிகாந்த்...

Asianet News Tamil  
Published : Dec 23, 2017, 09:46 AM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
இந்தமுறை நடக்கும் ரசிகர்கள் சந்திப்பில் அரசியல் பிரவேசம் குறித்து நிச்சயம் அறிவிப்பாராம் ரஜினிகாந்த்...

சுருக்கம்

Rajinikanth to announce political entrance to fans......

டிசம்பர் 26-ல் நடக்கும் ரசிகர்கள் சந்திப்பில் அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி அறிவிப்பார்  என்று அவரது நண்பரும் அரசியல் பிரமுகருமான தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாக அரசியலுக்கு வர உள்ளதாக தனது ரசிகர்களிடம் கூறிவருகிறார். ஆனால் இதுவரை அவர் அரசியல் பிரவேசம் குறித்த எந்த ஒரு திடமான முடிவையும் அறிவிக்கவில்லை. இதனால் அவரின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடனே காணப்படுகின்றனர்.

இதனையடுத்து, டிசம்பர் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தனது ரசிகர்களை சந்திக்க ரஜினி திட்டமிட்டுள்ளார். அப்போது, அவர் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் ரஜினியை, நண்பரும் அரசியல் பிரமுகருமான தமிழருவி மணியன் நேற்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

அந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழருவி மணியன், "டிசம்பர் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடக்கும் ரசிகர்கள் சந்திப்பில் ரஜினி தனது அடுத்தக் கட்ட திட்டம் பற்றி அறிவிப்பார். அதன்பின், அவரின் அரசியல் பிரவேசம் குறித்து எந்த சந்தேகமும் இருக்காது” என்று கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Pandian Stores 2 ட்வீஸ்ட்: "என் பொண்ண மறந்துடாதீங்க மாப்ளே..!" சரவணனுக்கு நேரடியாக தூதுவிட்ட தங்க மயிலின் அப்பா!
Super Singer Winner: இசை உலகை ஆளப்போகும் அந்த குரல்! இன்று வெளிச்சத்திற்கு வரும் சூப்பர் சிங்கர் வின்னர்!