
முக மூடி போட்டு படம் பார்த்த ரஜினிகாந்த்..! எந்த இடத்தில்..? யார் படம் தெரியுமா..?
நடிகர் சூர்யாவின் 43 ஆவது பிறந்த நாள் நேற்று வெகு விமரிசையாக அவர்களது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
பொதுவாகவே நடிகர் சூர்யா, தன்னுடைய ரசிகர்களுக்கு சில அறிவுரைகளை வழங்குவார்.அதில் குறிப்பாக, குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தெரிவிப்பார்.
மேலும், இந்த ஆண்டு பிறந்த நாள் ஸ்பெஷலாக, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சுமார் 400 பள்ளிக்கூடங்களில் புது கழிப்பறையை கட்டித்தரவும், அதனை தொடர்ந்து சீராக பராமரிக்கும் பணியை கூட மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நடிகர் சூர்யா குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவருடைய காக்க காக்க படம் வெளிவந்த சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சூர்யாவின் ஐபிஎஸ் ரோல் எப்படி இருக்குனு ஆசையாய் திரை அரங்கிற்கே வந்து பார்த்து உள்ளார் ரஜினிகாந்த்.
அவர் அப்போது பெங்களூரில் இருந்ததால், அங்குள்ள திரை அரங்கிற்கு வந்து பார்த்து மெய் மறந்து உள்ளார்.இந்த சம்பவத்தை, சூர்யா கலந்துக்கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவரே, அப்போது தெரிவித்து உள்ளார்.
நேற்றுமுன்தினம், நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் என்பதால், அவருடைய வெற்றி பக்கங்களை புரட்டி போடும் போது, இவை அனைத்தும், சூர்யாவிற்கு மறக்க முடியாத அனுபவங்களை நினைவு கூறும் வகையில் அமைந்து உள்ளது .
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.