நண்பா உன்னை இழந்துவிட்டேன்... ரஜினிகாந்த் உருக்கமான டிவீட்...

Published : Nov 25, 2018, 08:11 AM IST
நண்பா உன்னை இழந்துவிட்டேன்... ரஜினிகாந்த் உருக்கமான டிவீட்...

சுருக்கம்

பிரபல கன்னட நடிகரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான அம்பரீஷ் காலமானார். அவருக்கு வயது 66. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் அம்பரீஷ்  200 க்கும் மேற்பட்ட கன்னடப் படங்களில் நடித்தவர். இவர் தமிழில் ரஜினி நடித்த ப்ரியா படத்தில்  நடித்துள்ளார்.

பிரபல இயக்குனர் புட்டன்னாகனகல் மூலம் அறிமுகமான அம்பரீஷ், சுமார் 208 படங்கள் நடித்துள்ளார். இதில் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி மொழி படங்களும் அடங்கும்.  தமிழில் இவர் நடித்த பிரியா புகழ் பெற்ற படம் ஆகும். 
1998–1999, 1999–2004,2004–2009 ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2006 to 2008.மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சராகவும்,  2013_2016 கர்நாடக அமைச்சராகவும் இருந்துள்ளார்.கலைத்துறையில் ஈடுபட்டதற்காக நந்தி விருது, பிலிம் பேர் விருது, மாநில அரசு விருதுகள் தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அம்பரீஷ் மறைந்த செய்தியை அறிந்த சூப்பர்ஸ்டாரும் அம்பரீஷின் நெருங்கிய நண்பருமான நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

அதில், “ஒரு அருமையான மனிதர்.. எனது சிறந்த நண்பர்... உங்களை இன்று இழந்து விட்டேன்” என்று அம்பரீஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?