
கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி உள்ளன.
இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது.
கொச்சி விமான நிலையத்தில் தேங்கியுள்ள வெள்ளம் வடியாததால், 26-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் இரண்டாம் கட்ட பருவமழைக்கு இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திரையுலகைச் சேர்ந்தவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட கேரள மக்களுக்கு தங்கலால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர், அந்த வகையில் இதுவரை நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் ரூபாயும், சூர்யா, கார்த்தி ஆகியோர் 25 லட்சம் ரூபாயும், கமல்ஹாசன் 25 லட்சமும், சிவ கார்த்திகேயன்1 0 லட்சம் ரூபாயும். நடிகை ரோகினி 2 லட்சமும், நயன்தாரா 10 லட்சம் ரூபாயும் என முதலமைச்சர் நிவாரணத்துக்கு அளித்துள்ளனர்.
இவர்களை தொடர்ந்து தற்போது கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு ரூபாய் 15 லட்சம் நிதிஉதவியாக வழங்கியுள்ளார்.
ஆனால் இவர் வழங்கியுள்ள தொகை பலரையும் முனுமுனுக்க வைத்துள்ளது. ஏற்கனவே அரசியலில் குதித்த கமல் மிகவும் குறைவான தொகையை கேரள மக்களுக்கு வழங்கியுள்ளார் என கூறி வந்த நிலையில், ரஜினி கொடுத்துள்ளது அதைவிட பத்து லட்சம் குறைவாக உள்ளது. இதனால் பலர் ரஜினிக்கு கமலே பெட்டர் என கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.