நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, சினிமாவில் இயக்குனராக வலம் வருகிறார். இதுவரை மூணு, வை ராஜா வை, லால் சலாம் என மூன்று திரைப்படங்களை இயக்கி உள்ளார். இந்த மூன்று படங்களுமே வசூல் ரீதியாக தோல்வியை தழுவின. அதிலும் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்தும் அப்படம் தோல்வியடைந்தது. அதன் தோல்விக்கு பின்னர் ஐஸ்வர்யா சொன்ன காரணம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
லால் சலாம் படத்தின் 21 நாள் படப்பிடிப்பு காட்சிகள் அடங்கிய ஹார்ட்டிஸ்க் தொலைந்துவிட்டதாகவும், அது இல்லாமல் தான் படத்தின் மற்ற காட்சிகளை எடிட் செய்து வெளியிட்டதாக கூறினார். அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் இப்படத்தில் வந்ததால் அவருக்காக கமர்ஷியல் அம்சங்களை சேர்க்க வேண்டிய நிர்பந்தம் இருந்ததாகவும் ஐஸ்வர்யா கூறி இருந்தார். ரஜினி மகளின் இந்த பேட்டி மிகவும் வைரல் ஆனது.
இதையும் படியுங்கள்... Vikram : கோலிவுட்டின் ‘சீயான்’ இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா? நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு இதோ
லால் சலாம் படத்தின் தோல்வி ஒருபுறம் இருக்க, மறுபுறம் நடிகர் தனுஷிடம் விவாகரத்து கோரி அவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததும் கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக பேசப்பட்டது. இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் வருகிற அக்டோபர் மாதம் 7-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கின் விசாரணை அன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் ஐஸ்வர்யா தற்போது பழைய பார்முக்கு திரும்பி இருக்கிறார். படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் பிட்னஸில் அவரால் கவனம் செலுத்த முடியாமல் போனது. இந்த நிலையில், தற்போது மீண்டும் பிட்னஸ் பயணத்தை தொடங்கி உள்ள ஐஸ்வர்யா, தன்னுடைய வீட்டிலேயே ஒர்க் அவுட் செய்தபோது எடுத்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் அதற்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Thangalaan : தங்கலான் படத்துக்காக இம்புட்டு ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாரா விக்ரம்! மிரள வைக்கும் மேக்கிங் Video