பிரிவியூ தியேட்டருக்கு திடீர் விசிட் அடித்த ரஜினி...என்ன படம் பார்த்தார் தெரியுமா?

By Muthurama Lingam  |  First Published Nov 5, 2019, 11:50 AM IST

ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம், ’பார்த்த விழி பார்த்தபடி’கர்நாடக சங்கீதத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில், சாந்தி கிருஷ்ணா, சுதா மகேந்திரன், மதுவந்தி, புதுமுகங்கள் ப்ரணவ் சுரேஷ், பிரிசிதா உதய் உட்பட பலர் நடித்துள்ளனர். சேது இயாள் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு மறைந்த தட்சிணாமூர்த்தி இசை அமைத்துள்ளார். இவர், இளையராஜா, யேசுதாஸ் ஆகியோரின் இசை குரு. 

கர்நாடக சங்கீதத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள ’பார்த்த விழி பார்த்தபடி’படத்தை தனது மனைவி லதாவுடன் பிரிவியூ தியேட்டர் ஒன்றில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக பரதநாட்டியக் கலைஞராக நடித்த நடிகை சாந்தி கிருஷ்ணாவுக்கு தனது சிறப்பு வாழ்த்துகளை ரஜினி தெரிவித்தார்.

ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம், ’பார்த்த விழி பார்த்தபடி’கர்நாடக சங்கீதத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில், சாந்தி கிருஷ்ணா, சுதா மகேந்திரன், மதுவந்தி, புதுமுகங்கள் ப்ரணவ் சுரேஷ், பிரிசிதா உதய் உட்பட பலர் நடித்துள்ளனர். சேது இயாள் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு மறைந்த தட்சிணாமூர்த்தி இசை அமைத்துள்ளார். இவர், இளையராஜா, யேசுதாஸ் ஆகியோரின் இசை குரு. 

Latest Videos

இந்நிலையில், இந்தப் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டார்.மலையாளத்தில் ’ஷியாம ராகம்’என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படம், விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே இந்தப் படத்தின் சிறப்பு காட்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் மேஜிக் லேண்டர்ன் பிரிவியூ தியேட்டரில் ஞாயிற்றுக் கிழமை திரையிடப்பட்டது. இதை நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதாவுடன் வந்து பார்த்தார். பின்னர், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர்கள் கே.விஜயலட்சுமி, லீனா ஆனந்த் உட்பட படக்குழுவினரை ரஜினிகாந்த் பாராட்டினார்.

இப்படத்தில் பரதநாட்டியக் கலைஞராக நடித்த சாந்தி கிருஷ்ணா படம் குறித்து கூறுகையில்,’நான் ஆறு வயது முதலே பரத நாட்டியம் கற்று வந்தவள். சினிமாவில் எனது பரதநாட்டியத் திறமையைக் காட்ட இதற்கு முன்னர் மிகச் சிறிய வாய்ப்புகளே கிடைத்தன. ஆனால் இப்படத்தில் எனது முழுத் திறமையும் வெளிப்படும்’என்கிறார்.

click me!