சூப்பர் ஸ்டாரின் 70வது பிறந்தநாளுக்கு ரஜினி ரசிகர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி...

By Muthurama Lingam  |  First Published Nov 23, 2019, 1:12 PM IST

கமலின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்துள்ள நிலையில் ரஜினியின் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்களுக்கு இன்னும் சரியாக இருபது தினங்களே உள்ளன. ஐது அவரது 70 வது பிறந்தநாளாகும். இதற்கான பல விழா ஏற்பாடுகள் பல இடங்களில் திட்டமிடப்பட்டு வரும் நிலையில், பிரபல திரைப்பட நிறுவனமான சத்யா மூவிஸ் ‘பாட்சா’படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது.


வரும் டிசம்பர் 12 ம் தேதி ரஜினி தனது 70 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவிஸ் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்க உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கமலின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்துள்ள நிலையில் ரஜினியின் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்களுக்கு இன்னும் சரியாக இருபது தினங்களே உள்ளன. இது அவரது 70 வது பிறந்தநாளாகும். இதற்கான பல விழா ஏற்பாடுகள் பல இடங்களில் திட்டமிடப்பட்டு வரும் நிலையில், பிரபல திரைப்பட நிறுவனமான சத்யா மூவிஸ் ‘பாட்சா’படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

1995ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ரஜினியின் சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘பாட்ஷா’. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையில் ஓடி ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் ’பாட்ஷா’. இந்த படம் அண்மையில் டிஜிட்டல் வடிவில் மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கோவா திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் Icon of Golden Jublee விருது பெற்றதை வரவேற்கும் விதமாகவும், அவரது பிறந்தநாள் அடுத்த மாதம் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டும் பாட்ஷா படத்தை மீண்டும் திரையிட அதன் தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவிஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க பல முக்கிய நகரங்களில் அப்படத்தை வெளியிட உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

For fans-In honour of receiving the Icon of India award @ IFFI and in celebration of his B’Day we are pleased to announce the theatrical experience of in select cities worldwide from Dec 11!

— Sathya Movies (@sathyamovies)

 

click me!