
4 வருடங்களை கடந்த சினிமா பயணத்தில் தனி முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் என்றும் ஓய்வு இல்லாத ரஜினிக்கு மேலும் கவுரவம் சேர்க்கும் வகையில் மத்திய அரசு சிறப்பு நட்சத்திரத்திற்கான விருதை அறிவித்துள்ளது. இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறப்பு விருதாக ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி விருதையும் வழங்க உள்ளது.
இதனை ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூகவலைதளமான ட்விட்டர் பக்கத்தில் #வாழ்நாள்சாதனையாளர்ரஜினி #Rajinikanth #IFFI2019 #ICON OF GOLDEN JUBILEE ஆகிய 4 ஹேஸ்டேக்குகள் டாப் ட்ரெண்டிங்கில் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் திமுக- திக ஆதரவாளரான மதிமாறன் ‘’ ரஜினிகாந்த் இவ்வளவு நாட்கள் வாழ்வதே சாதனை தான் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது ரஜினி ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் மதிமாறனை வறுத்தெடுத்து கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.