
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்-தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கமல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
கடந்த நான்கு நாட்களாக சூப்பர் ஸ்டார் வீட்டில் கல்யாண விசேஷம் களைகட்டுகிறது. ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிகளாகட்டும், இன்று நடக்கும் கல்யாணாமாகட்டும் ரஜினி முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.
கடந்த இரண்டு வாரங்களாகவே ரொம்பவே சுறுசுப்பாக இருந்து வருகிறார். இது இரண்டாம் கல்யாணம் என்பதையே மறக்கும் அளவிற்கு மிக பிரமாண்ட ஏற்பாட்டை செய்து வந்துள்ளனர் குடும்பத்தினர். அதுவும் ரஜினி தனி அக்கறை எடுத்து தமிழகத்தில் உள்ள முக்கிய விவிஐபி, அரசியல் தலைவர்கள் தேடித் தேடி பத்திரிக்கை வைத்தார். கடந்த நான்கு நாட்களாக குடும்பத்தினரோடு நேரம் ஒதுக்கியும், செல்ஃபிக்கு ஃபோஸ் கொடுத்தும் கொண்டடி வருகிறார்.
இவ்வளவு பிஸியான ஹேப்பி மூவ்மெண்ட்டிலும் தனது பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுவதை மறக்கவில்லை. கல்யாண விழா போட்டோக்கள் இணையத்தில் ரவுண்டடித்தாலும், சவுந்தர்யாவின் மகனை கொஞ்சி விளையாடும் ஒரு போட்டோ சூப்பர்ஸ்டாரை குழந்தையாக காட்டியது. ஆமாம் நேற்றிரவு நடந்த பார்ட்டியில் தனது பேராக் குழந்தைகளோடு ரஜினிகாந்த் ஜாலியாக ஆடினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.