
நடன இயக்குனர், நடிகர், திரைப்பட இயக்குனர் என பல்வேறு பரிமாணங்களில் பிரதிபலித்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். சமூக சேவை மற்றும் இன்றி தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், மற்றும் விவசாயிகள் பிரச்சனைக்காகவும் இளைஞர்களுடன் இணைந்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இவர் ஏற்கனவே ரஜினியைப் போலவே ஸ்ரீராகவேந்திரா சுவாமிகள் மீது அளவற்ற பக்தி கொண்டவர், அதனால் தன்னுடைய பெயரை கூட 'ராகவா லாரன்ஸ்' என மாற்றிக்கொண்டார்.
சென்னையில் ராகவேந்தராவிற்கு கோயில் கட்டி நிர்வகித்துவரும் லாரன்ஸ் தன்னுடைய தாயாரான கண்மணிக்கும் கோயில் கட்டியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
அந்தக் கோயிலில் வைக்கப்படும் அம்மா சிலையை கூட ,சமீபத்தில் வட இந்திய சிற்பிகளிடம் வடிவமைத்து சென்னைக்கு கொண்டு வந்துள்ளார்.
விரைவில் திறப்பு விழா காணப்போகும் இந்த அம்மா கோயிலுக்குள், சர்ச் ஒன்றையும் கட்டியிருக்கிறாராம் லாரன்ஸ்.
அம்மா கோயில் திறக்கப்படும் தினத்தன்றே சர்ச்சையும் திறக்க முடிவெடுத்துள்ளாராம். இதனால், தற்போது மாலை போட்டு விரதமிருக்கிறார் லாரன்ஸ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.