
’காஞ்சனா’ படத்தின் இந்தி ரீமேக் துவங்கி ஒரு வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் ’மனிதர்களுக்கு மற்ற எல்லாவற்றையும் விட தன் மானம் தான் முக்கியம்’ என்று அறிவித்தபடி மும்பையிலிருந்து சென்னைக்கு ரிட்டர்ன் டிக்கட் எடுத்து விட்டார் இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்.
அக்ஷய் குமார், அத்வானி கியாரா, அமிதாப் நடிக்க லாரன்ஸ் இயக்கத்தில் துவங்கப்பட்ட காஞ்சனாவின் ரீமேக் ‘லக்ஷ்மி பாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது.அதை வெளியிடும் தகவலை இயக்குநர் லாரன்ஸுக்கு ஹீரோ அக்ஷய் குமாரும் தயாரிப்பாளர் தரப்பும் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. அதை ஒரு இயக்குநருக்கு நடந்த ஆகப் பெரிய அவமானமாகக் கருதிய லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,...’நண்பர்களே மதியாதார் வாசல் மிதியாதே’ என்பது தமிழனின் பழமொழி. ‘லக்ஷ்மி பாம்’ படப்பிடிப்பில் எனக்கு அது நடந்துவிட்டது.எனவே தன்மானமே முக்கியம் என்று கருதி இப்படத்தை விட்டு வெளியேறுகிறேன்.
நான் நினைத்தால் கதையை கொடுக்க முடியாது என கூறலாம், ஆனால் அப்படி செய்யப்போவதில்லை. அக்க்ஷய் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. அவரை சந்தித்து ஸ்கிரிப்டை ஒப்படைத்துவிட்டு முறையாக விலகுகிறேன். அவர்கள் வேறொரு இயக்குநரை ஒப்பந்தம் செய்துகொண்டு இப்படத்தைத் தொடரலாம். படம் பெரும் வெற்றி பெற குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று பொங்கியிருக்கிறார்.
ஆனால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் லாரன்ஸுக்குக் கோபம் வந்தது என்பது முக்கிய காரணமில்லை என்றும் படம் துவங்கிய முதல் நாளிலிருந்தே ஒரு இயக்குநர் என்றும் பாராமல் லாரன்ஸை தயாரிப்பாளர் தரப்பு தொடர்ந்து அவமரியாதையாகவே நடத்தியதாகவும், கிண்டலான வார்த்தைகளால் அவரை விளித்ததாகவும் அப்படத்தின் தமிழ் டீம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.