
90 களின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த நடிகர் சரத்குமார். சமீப காலமாக, ஹீரோவாக நடித்த சில படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால், இப்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மல்டிஸ்டார் படமாக உருவாகியுள்ள 'வானம் கொட்டட்டும்' படத்தில், சூரிய வம்சம் படத்திற்கு பின், தன்னுடைய மனைவி ராதிகாவுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த படத்தை பார்த்த ராதிகாவின் மகள் ரேயான் தன்னுடைய தந்தைக்கு உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது அப்பா... என உருக்கமான செய்தியை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக... இந்த படத்தில் உங்களை பார்ப்பது என்னை ஒருவித உணர்ச்சிவசப்படுத்தியது - நான் உங்களை கட்டிப்பிடித்து ஐ லவ் யூ என்று சொல்ல விரும்பினேன். நான் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இவரின் டிவிட்டை கிண்டல் செய்யும் விதமாக ஒரு நபர் மோசமாக விமர்சித்து, ட்விட் போட அதற்க்கு, மிகவும் கோவமாக, அவர் தன்னுடைய தந்தை தான் இப்போ என்ன பண்ண போற... என நச் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.