
அஜய் தேவ்கன் தயாரிப்பில் உருவான ‘பார்ச்டு' படத்தில் இடம்பெற்ற அடில் ஹுசைன் மற்றும் ராதிகா ஆப்தே இருவருக்கும் இடையேயான படுக்கையறை காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராதிகா ஆப்தே செய்தியாளர் ஒருவர் 'பார்ச்டு' இந்திப் படத்தின் கசியவிடப்பட்ட வீடியோ விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ராதிகா ஆப்தே, உங்களது கேள்வி கேலிக்குரியதாக இருக்கிறது. சர்ச்சைகள் உங்களைப் போன்றவர்களால் தான் உருவாக்கப்படுகிறது. நீங்கள் அந்த வீடியோவைப் பார்த்து,அடுத்தவர்களுடன் பகிர்கிறீர்கள். ஆகையால் நீங்கள் தான் சர்ச்சையை உண்டாக்குகிறீர்கள்.
நீங்கள் கூட்டைவிட்டு வெளியே வந்து உலக சினிமாவைப் பாருங்கள். அதை வெற்றிகரமாக அங்கு எப்படி செய்து வருகிறார்கள் என்பதை பாருங்கள். அப்படி பார்த்தீர்கள் என்றால் இந்தக் கேள்வியை எல்லாம் கேட்டிருக்க மாட்டீர்கள்.
நான் எதற்கும் தயங்கவில்லை. தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள்.
உங்களுக்கு நிர்வாண உடம்பை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தால் என்னுடைய வீடியோவை பார்ப்பதை விட்டுவிட்டு, உங்களையே கண்ணாடி முன்பு நின்று பார்த்துக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு நாம் பேசலாம் என சாடினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.