எட்டு வருடங்களாக தனது திருமண ரகசியத்தை மறைத்த ரஜினி பட ஹீரோயின்...

Published : Feb 08, 2019, 12:26 PM IST
எட்டு வருடங்களாக தனது திருமண ரகசியத்தை மறைத்த ரஜினி பட ஹீரோயின்...

சுருக்கம்

எட்டு வருடங்களுக்கு முன்பே தனக்கு ரிஜிஸ்டர் திருமணம் நடந்துவிட்டது என்கிற ரகசியத்தை திடீரென போட்டு உடைத்திருக்கிறார் நடிகை ராதிகா ஆப்தே. தனது திருமணம் குறைத்த செய்தியை திட்டமிட்டு மறைக்கவில்லை. அதை யாரிடமும் சொல்லவேண்டுமென்று தனக்கு தோணவில்லை என்றும் கூறுகிறார் அவர்.

எட்டு வருடங்களுக்கு முன்பே தனக்கு ரிஜிஸ்டர் திருமணம் நடந்துவிட்டது என்கிற ரகசியத்தை திடீரென போட்டு உடைத்திருக்கிறார் நடிகை ராதிகா ஆப்தே. தனது திருமணம் குறைத்த செய்தியை திட்டமிட்டு மறைக்கவில்லை. அதை யாரிடமும் சொல்லவேண்டுமென்று தனக்கு தோணவில்லை என்றும் கூறுகிறார் அவர்.

தமிழில் ‘வெற்றிச்செல்வன்’, ‘தோனி’,’கபாலி’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் ராதிகா ஆப்தே இந்தில் முன்னணி நடிகையாக உள்ளார். சினிமாவில் பிசியாக இருந்தாலும் வெப் சீரியல்களிலும், குறும்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சில நிர்வாணப் படங்களிலும் துணிச்சலாக நடித்திருக்கும் அவர் முதன் முதலாக தனது திருமண வாழ்க்கை குறித்து வாய்திறந்திருக்கிறார்.

“நானும், பெனடிக்கும் 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து பதிவு திருமணம் செய்துகொண்டோம். இப்போது கூட பலருக்கு நாங்கள் திருமணம் செய்துகொண்டது தெரியாது. மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும்.

நானும், எனது கணவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக பாசம் வைத்துள்ளோம். எங்களுக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தகராறுகள் வருவதுண்டு. ஆனாலும் அவை சிறிது நேரம்தான் இருக்கும். சண்டை போட்டால் உன்னுடன் பேச விருப்பம் இல்லை என்றோ, சிறிது நேரம் கழித்து பேசுவோம் என்றோ சொல்வது இல்லை. சில நிமிடங்களிலேயே இருவரும் பேசிவிடுவோம்.

யார் மீது தவறு இருந்தாலும் இருவருமே மன்னிப்பு கேட்டுக்கொள்வோம். கணவனும் மனைவியும் சண்டை போட்டுக்கொண்டு நீண்ட நாட்கள் பேசாமல் இருந்தால் பிரச்சினைகள் பெரிதாகி விடும். சண்டையை மனதில் வைத்துக்கொள்ளாமல் மறந்துவிடுவோம். எனக்கும், எனது கணவருக்கும் எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. நீ என்னை மதிக்கவில்லை. முக்கியத்துவம் தரவில்லை என்றெல்லாம் ஒருமுறை கூட சொன்னது இல்லை. அவர் லண்டனில் இருக்கிறார். நான் மும்பையில் இருக்கிறேன். ஆனால் மாதம் ஒருமுறையாவது லண்டனிலோ மும்பையிலோ தவறாமல் சந்தித்துக்கொள்கிறோம்’என்கிறார்  ராதிகா ஆப்தே.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜாடைமாடையாக பேசி வம்பிழுத்த அருணை அடிவெளுத்த முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
1000 எபிசோடுகளை கடந்து வெற்றிநடைபோட்டு வரும் சீரியலை இழுத்து மூடும் சன் டிவி - அதிர்ச்சியில் ரசிகர்கள்