ராய் லட்சுமி ரீலோடட் வெர்ஷன் 2 பாயின்ட் ஓ... ஹாட் லுக்கில் சூடேற்றும் செம்ம அப்டேட்!

Published : Dec 04, 2018, 07:08 PM IST
ராய் லட்சுமி ரீலோடட்  வெர்ஷன் 2 பாயின்ட் ஓ... ஹாட் லுக்கில் சூடேற்றும் செம்ம அப்டேட்!

சுருக்கம்

ராய் லட்சுமி நடிப்பில் ஒரே நேரத்தில் மூன்று படங்கள் தயாராகிவரும் நிலையில் தற்போது ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக என அடுத்தடுத்து ஹாட் மூடில் அதகளப்படுத்த வருகிறார். 

மிருகா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படம் குறித்து ராய் லட்சுமி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.  தெலுங்கு, கன்னடத்திலும் படங்கள் வரிசையாக உள்ளன. எனவே சின்ட்ரல்லா படத்துக்குப் பிறகு இதில் இணைந்தேன். படப்பிடிப்புக்கு முன்பாக ஆரம்பகட்டப் பணிகளும் இந்தப் படத்தில் இருந்தன” என்று கூறியுள்ளார்.

சௌகார்பேட்டை படத்துக்குப் பின் இரண்டாவது முறையாக ராய் லட்சுமி, ஸ்ரீகாந்துடன் இந்தப் படத்தில் நடிக்கிறார். “ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடிக்கிறேன் என்று சொல்ல முடியாது. அவரது கதாபாத்திரம் சற்று வித்தியாசமானது. வழக்கமான கதாநாயகன் - கதாநாயகி திரைப்படம் இது அல்ல.

நான் ஒரே மாதிரியான படங்களில் நடித்து அலுப்பாகி விட்டது. எனது தவறுகளை இப்போது சரிசெய்து வருகிறேன். நீயா 2 பாம்புகளைப் பற்றிய படம். சின்ட்ரல்லா ஹாரர் படமாக உருவாகிறது” என்று கூறியுள்ளார்.

மிருகா படத்தை பார்த்திபன் இயக்க, பன்னீர்செல்வம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். இந்தப் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கூறிய ராய் லட்சுமி, “நான் விதவையாக நடித்துள்ளேன். நன்கு வடிவமைக்கப்பட்ட முதிர்ச்சியான கதாபாத்திரம். தற்போது பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் ஊட்டிக்குப் பயணமாக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?