இந்தியில் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியாகிய ‘குயின்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படம் கங்கனாவிற்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது.
தற்போது இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய அனைத்து மொழி இயக்குனர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் ரீமேக் ஆகியுள்ளது.
இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த வேடத்தில் தமிழில் 'காஜல் அகர்வால்' நடிக்கிறார். தெலுங்கில் தமன்னாவும் மலையாளத்தில் மஞ்சிமா மோகனும், கன்னடத்தில் பருல் யாதவும் நடிக்க உள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பிரான்ஸ் நாட்டில் தொடங்கி இருக்கிறது. இதற்காக 4 மொழிகளில் நடிக்கும் நடிகைகளும் ஒரே நேரத்தில் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளனர். இங்கு இவர்கள் 4 பேருக்குமான படப்பிடிப்பு தனித்தனியாக நடக்கிறது.