விஜயகாந்த் மகன் படத்திற்கு வீராங்கணை பி.வி.சிந்து செய்த உதவி..!

First Published Dec 27, 2017, 4:48 PM IST
Highlights
pv sinthu help the vijayakanth son


பல தமிழ்ப் படங்களில் நடித்து முன்னணி நடிகராகவும், அரசியலில் களம் கண்டவராகவும் வெற்றி வாகை சூடியவர் நடிகர் விஜயகாந்த். தற்போது இவருடைய இளைய மகன் சன்முகப்பாண்டி ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'மதுர வீரன்' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படத்தில் முழு கிராமத்து இளைஞராகவே வாழ்ந்து நடித்துள்ளார் சண்முகப்பாண்டி என்பதற்கு ஏற்றது போல் அவருடைய கதாபாத்திரம் அமைந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கேப்டன் விஜயகாந்த் , பிரேமலதா விஜயகாந்த், சமுத்திரக்கனி, படத்தின் நாயகி மீனாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தற்போது  இந்தப் படத்தின் வீடியோ பாடலை நேற்று, ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கணை பி.வி.சிந்து 'உன் நெஞ்சுக்குள்ள' என்று தொடங்கும் பாடலை வெளியிட்டுள்ளார்.

பி.வி.சிந்து விஜயகாந்தின் மூத்த மகனுக்கு சொந்தமான 'சென்னை ஸ்மாஷர்ஸ் அணியில் விளையாடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ள இந்தப் படத்தை இயக்குனர் பிஜி முத்தையா இயக்கியுள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை வி ஸ்டுடியோஸ் மற்றும் பிஜி மீடியா வொர்க்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன

click me!