
தேர்தல் சமயம் என்பதால், பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து மக்களிடம் ஓட்டு வாங்கும் யுத்தியை அரசியல்வாதிகள் கையாளுவதை தடுக்கும் பொருட்டு, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் உரிய ஆதாரங்கள் இல்லாமல் அதிக தொகையோ, பொருட்களை கொண்டு சென்றால் அவற்றை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி ரூ. 50 ,000 தொகையுடன் போலீசில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, அண்மையில் கோவில் திருவிழா ஒன்றில் கலந்து கொண்டு பாடியுள்ளார். அதற்க்கு சம்பளமாக பெற்ற 50 ஆயிரம் ரூபாயுடன் தன்னுடைய காரில் சென்றுள்ளார். அப்போது அதிகாரிகள் காரை வழி மறித்து சோதனை செய்தபோது அவருடைய காரில் 50 ,000 ரூபாய் இருப்பதை கண்டதும் அதற்கான ஆதாரத்தை காட்டுமாறு வலியுறுத்தியுள்ளனர். பின்னர் புஷ்பவனம் குப்புசாமி கோவில் நிர்வாகத்தினரை அழைத்து பேச வைத்த பின்பே பணத்தை திருப்பி கொடுத்ததோடு, அவரையும் அந்த இடத்தில் செல்ல போலீசார் அனுமதித்தனர். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.