தயாரிப்பாளர் சங்கம் முடக்கப்பட்டதை மறைத்து கோடிகளில் மோசடி செய்யும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்...

By Muthurama LingamFirst Published Mar 29, 2019, 11:09 AM IST
Highlights

‘தயாரிப்பாளர் சங்கத்தின் பதிவு ரத்தானதை மறைத்து சங்க உறுப்பினர்களிடம்  தொடர்ந்து பணம் கையாடல் செய்து வருவதாக பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும் சங்கத்தின் முன்னாள் உறுப்பினருமான ஜாகுவார் தங்கத்தின் மீது 50க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.


‘தயாரிப்பாளர் சங்கத்தின் பதிவு ரத்தானதை மறைத்து சங்க உறுப்பினர்களிடம்  தொடர்ந்து பணம் கையாடல் செய்து வருவதாக பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும் சங்கத்தின் முன்னாள் உறுப்பினருமான ஜாகுவார் தங்கத்தின் மீது 50க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை தி.நகரில் இயங்கி வருகிறது. ’கில்டு’ என்று அழைக்கப்படும் இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் 50 பேர் சங்கத்தின் முன்னாள் தலைவரான ஜாக்குவார் தங்கம் மீது பல்வேறு குற்றச் சாட்டுகளை முன்வைத்து இன்று காலை சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

செய்தி அறிந்த போலீசார் வந்து அவர்களை சமாதானப்படுத்தினார்கள். பின்னர் நிருபர்களிடம் ஜாகுவார் தங்கத்தின் மோசடிகுறித்து பேட்டி அளித்த தயாரிப்பாளர்கள்,’கில்டு அமைப்பு கடந்த நான்கு வருடங்களாக கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்காததால் பதிவுத்துறை நடவடிக்கையால் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த மாதம் 28-ந்தேதி அரசிதழில் கில்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜாக்குவார் தங்கம் அரசிதழில் வெளிவந்த செய்தியை மறைத்து சங்கத்திற்கு வரும் உறுப்பினர்களிடம் சந்தா புதுப்பித்தல், டைட்டில் பதிவு செய்தல் மற்றும் உறுப்பினர்களை சேர்த்தல் போன்ற செயல்களின் மூலம் முறைகேடாக பணங்களை பெற்று வருகிறார். இதற்கு சட்டவிரோதமாக ரசீதும் வழங்கி வருகிறார். இப்படி வசூலிக்கப்படும் பணத்தை தன் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்துகிறார்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

click me!