
சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகைகள் சிலருக்கு வெள்ளி திரையிலும் கதாநாயகி வாய்ப்பு தேடி வருகிறது. ஆனால் அப்படி அறிமுகமாகும் நடிகைகள் அனைவரும் திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்கிறார்களா என்றால் அது சந்தேகம் தான்.
'கல்யாணம் முதல் காதல்வரை' சீரியலில் அறிமுகமான நடிகை பிரியா பவானி ஷங்கர், 'மேயாத மான்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்ததால், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் படங்களில் நடித்தார். தற்போது ஒரு சில படங்களில் நடிக்க இவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் இவரை போலவே, சின்னத்திரை சீரியல்களில் பிரபலமான நடிகை வாணி போஜன், வெள்ளித்திரையில் ஏற்கனவே ஒரு திரில்லர் படத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது நடிகர் 'வைபவுக்கு' ஜோடியாக மற்றொரு படத்தில் நடக்க கமிட் ஆகியுள்ளார்.
சின்னத்திரையிலிருந்து வந்த பிரியா பவானி முதல் முறையாக வைபவ்வுக்கு ஜோடியாக மேயாத மான் படத்தில் தான் அறிமுகமானார். இவரை தொடர்ந்து தற்போது வாணி போஜனும் வைபவுக்கு ஜோடியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.