புதிய படத்தின் அப்டேட்டுடன் சூப்பர் மெசேஜ் சொன்ன பிரியா பவானி சங்கர்! - யாருக்கு சொல்லியிருக்காருன்னு பாருங்க...!

Published : Nov 14, 2019, 11:31 AM IST
புதிய படத்தின் அப்டேட்டுடன் சூப்பர் மெசேஜ் சொன்ன பிரியா பவானி சங்கர்! - யாருக்கு சொல்லியிருக்காருன்னு பாருங்க...!

சுருக்கம்

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு மேயாத மான் படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். முதல் படத்திலேயே குடும்ப பாங்கான, பாந்தமான அழகால் ரசிகர்களை வசீகரித்த அவர், கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து பிரபலமானார். 

இந்தப் படத்திற்குப் பின்னர், எஸ்.ஜே.சூர்யாவுடன் பிரியா பவானிசங்கர் இணைந்து நடித்த 'மான்ஸ்டர்' படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில், பிரியா பவானி சங்கர் தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டார்.


தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய்யுடன் 'மாஃபியா' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள பிரியா பவானி சங்கர், அடுத்து, பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2' படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். 

இதுதவிர, ஜீவாவின் 'களத்தில் சந்திப்போம்', அதர்வாவின் 'குருதி ஆட்டம்', சிம்புதேவனின் 'கசட தபற' என அரைடஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார் பிரியா பவானி சங்கர்.


இப்படி, தமிழில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் அவர், மான்ஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.

 பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்துக்கு 'பொம்மை' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில், பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். 

அதில், "'பொம்மை' எனும் படத்தில் எனது பணிகளை நேற்றிரவு நிறைவு செய்து விட்டேன். இந்த இரவு திடீரென மிக அழகாக இருப்பதாக உணர்கிறேன். என்னை நம்புங்கள் நீங்கள் காயப்படிருக்கிறீர்கள் என்றால், அந்த காயம் சீக்கிரமே மறைந்து போய் நல்ல விஷயங்கள் மட்டுமே இனி வரும் நாட்களில் உங்களுக்கு நடக்கும். அனைவருக்கும் எனது அன்புகள்..!'' என்று குறிப்பிட்டுள்ளார்.


அவரது இந்தப் பதிவு மூலம், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் 'பொம்மை' என்பது உறுதியாகிவிட்டது. ஆனால், பிரியா பவானி சங்கர் சொல்லியிருக்கும் மெசேஜ்தான் யாருக்கு என்று புரியவில்லை. அவரால் மனதளவில் காயப்பட்ட நபருக்காக இந்த மெசேஜை கூறியுள்ளாரா? அல்லது தனது ரசிகர்களுக்காக சொல்லியிருக்காரா? எதற்காக அவரை நம்ப சொல்கிறார்? என்பதுதான் குழப்பமாக உள்ளது. இதனை, பிரியா பவானி சங்கரே தெளிவுப்படுத்தினால்தான் உண்டு.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?