37 கார் 5 ட்ரக்கை நொறுக்கி தள்ளிய பிரபாஸ்...! எங்கு தெரியுமா..?

Asianet News Tamil  
Published : Jun 15, 2018, 04:56 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
37 கார் 5 ட்ரக்கை நொறுக்கி தள்ளிய பிரபாஸ்...! எங்கு தெரியுமா..?

சுருக்கம்

prabas breaks out 37 car and 5 trucks

UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்க சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் - ஸ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் "சாஹூ".

ரசிகர்கள் இதுவரை காணாத வித்தியாசம் கொண்ட மாஸ் நிறைந்த வேடத்தில் பிரபாஸ் "சாஹூ" படத்தில் நடித்துள்ளார். நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்கின்றார். 

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அபு தாபியில் நடந்து வருகிறது. அபு தாபி அரசரின் சிறப்பு அனுமதி பெற்று சாஹூ படத்திற்காக உருவாகும் பிரம்மாண்டமான ஆக்ரோஷமும் அதிரடியும் நிறைந்த ஒரு மெகா சண்டைக்காட்சியில் பிரபாஸ் நடித்துவருகிறார்.

பிரபாஸ் தனது படங்களில் தனது அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டவர். ஒரே ஷெட்யுலாக 20 நாட்கள் எடுக்கப்படும் இந்த சண்டைக்காட்சிக்காக பாலைவனத்தில் சுட்டெரிக்கும் சூரியனின் வெட்ப்பத்தையும் பொருட்படுத்தாமல் ஒளிப்பதிவாளர் மதியின் ஆறு கேமரா செட்டப்பில், கிட்டத்தட்ட 37 கார்களையும் 5 ட்ரக்குகளையும் பிரபாஸ் அடித்து நொருக்கும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்துறையின் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களான சாபு சிரில் கலை இயக்குனராகவும், திரைப்படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் ஆகிவற்றை மேற்கொள்கிறார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது "சாஹூ" என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடத்தல் மன்னன் தேவசகாயத்துக்கு ஜனனி வச்ச ஆப்பு... எதிர்பாரா ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
கோர்ட்டில் மனோஜை ஆதாரத்துடன் சிக்க வைத்த ரோகிணி... சாட்சி சொல்ல வந்தவர்களுக்கு சிக்கல் - சிறகடிக்க ஆசை அப்டேட்