பவர்ஸ்டாரின் முதல் மனைவிக்கு பிரமாண்டமாக நடந்த நிச்சயதார்த்தம்...! விரைவில் டும் டும் டும்...!

 
Published : Jun 25, 2018, 03:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
பவர்ஸ்டாரின் முதல் மனைவிக்கு பிரமாண்டமாக நடந்த நிச்சயதார்த்தம்...! விரைவில் டும் டும் டும்...!

சுருக்கம்

power star pawan kalyan wife second marriage

தமிழில் நடிகர் பார்த்திபன், பிரபுதேவா இணைந்து நடித்த 'ஜேம்ஸ்பாண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரேணுதேசாய். தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யானை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஐந்து வருடங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக 2013 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

பவன் கல்யானை விவாகரத்து செய்த பின், தன்னுடைய சொந்த ஊரான பூனேவிற்கே சென்று விட்டார் ரேணுதேசாய்.

இந்நிலையில் இவர் 2 ஆவது திருமணத்திற்கு தயாராகி உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் இவரே சமூக வலைத்தளத்தில் சில கருத்துக்களை வெளியிட்டு உறுதி படுத்தினார்.

இந்நிலையில், இவருக்கும் இவருடைய காதலருக்கும் தற்போது பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துக்கொண்டனர். ஆனால் இதுவரை ரேணுதேசாய் தான் திருமணம் செய்துக்கொள்ள போகும் நபர் யார் என்பதை வெளியுலகிற்கு தெரியப்படுத்தாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜயகாந்த் மகன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? கொம்புசீவி விமர்சனம் இதோ
2025-ல் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியும் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள்