“ குந்தி “யில் மிரட்டல் அவதாரம் எடுக்கும் பூர்ணா...!

 
Published : Apr 17, 2018, 03:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
“ குந்தி “யில் மிரட்டல் அவதாரம் எடுக்கும் பூர்ணா...!

சுருக்கம்

poorna aging horrer movie

 'சவரக்கத்தி ' படத்தின் வெற்றியை தொடர்ந்து, கதைக்கும், கதாநாயகிக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை பூர்ணா. தற்போது இவர் அன்னை  திரைக்களம் சார்பில்  மே.கோ.உலகேசு குமார், மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இணைந்து தயாரிக்க SFF  TV   வழங்கும் படம் “ குந்தி “

இந்த படத்தில் பூர்ணாவிற்கு ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

படம் பற்றி A.R.K.ராஜராஜா கூறியதாவது..

தெலுங்கில் ராட்ஷஷி என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றியை கண்ட இந்த படமே தமிழில் “ குந்தி “ என்ற பெயரில் தயாரித்து வருவதாகவும்.

தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பூர்ணாவின் வாழ்வில் திடீரென ஒரு அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடக்கிறது. ஒரு பேய் தனது குழந்தைகளை கொள்ள துடித்துக்கொண்டிருக்க அந்த பேயிடமிருந்து எப்படி குழந்தைகளை காப்பாற்றினார் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

அருந்ததி, சந்திரமுகி, முனி, காஞ்சனா போன்ற படங்களை மிஞ்சும், அளவில் தமிழ் சினிமாவின் அடுத்த பிரமாண்டமான பேய் படமாக இந்த குந்தி இருப்பாள்.

முப்பது நிமிடம் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பாகவும், திகிலாகவும் இருக்கும் என்றும். இதுவரை பேய் படங்களில் நடித்த பிரபலங்களை மிஞ்சும் அளவிற்கு இந்த படத்தில் பூர்ணா தனது நடிப்பு திறமையை வெளிபடுத்தி இருக்கிறார். இந்த படம் அவரது திரையுலக வாழ்கையில் ஒரு மயில்கல் என்பதில் எந்த ஐயமும் இல்லை. விரைவில் அனைவரையும் பயத்தில் உறைய வைக்க வருகிறாள் இந்த “ குந்தி “ என்றார் A.R.K.ராஜராஜா.
  
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?
சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!