பொன்னியின் செல்வன் பட நடிகர்களை துரத்தும் கொரோனா... விக்ரம், திரிஷாவை தொடர்ந்து மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி

Ganesh A   | Asianet News
Published : Jan 23, 2022, 11:11 AM IST
பொன்னியின் செல்வன் பட நடிகர்களை துரத்தும் கொரோனா... விக்ரம், திரிஷாவை தொடர்ந்து மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி

சுருக்கம்

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் சிலருக்கு சமீபகாலமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் நடிகர் விக்ரமுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. இதில் விக்ரம், ஜெயராம்,  சரத்குமார், பார்த்திபன், பிரபு, லால், ரியாஸ் கான், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

டெக்னிக்கல் சைடிலும் இசைக்கு ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவிற்கு ரவிவர்மன், கலைக்கு தோட்டாதரணி என மிகப்பெரிய ஜாம்பாவன்கள் டீம் பணியாற்றியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படம் இரண்டு பாகமாக உருவாகி உள்ளது. இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்து விட்டது. தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபகாலமாக இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் நடிகர் விக்ரமுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார். க்டந்த சில வாரங்களுக்கு நடிகை திரிஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அவரும் சிகிச்சை பின் மீண்டார்.

இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் ஜெயராம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அதற்காக சிகிச்சை பெற்று வரும் அவர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மாஸ் ஹீரோவை மடியில் அமர வைத்திருக்கும் MGR... இந்த சிறுவன் யார் என்று தெரிகிறதா?
Rajinikanth: நண்பர்கள் தான் வாழ்க்கையின் ரீசார்ஜ் பாயிண்ட்! சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் உண்மை.!